இமாச்சல் சிறுமியிடம் அத்துமீறல் பாஜ எம்எல்ஏ மீது போக்சோ வழக்கு
சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் சுராஹ் தொகுதியில் மூன்று முறை பாஜ எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹன்ஸ் ராஜ். கடந்த ஆண்டு தொடக்கத்தில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் எம்எல்ஏ மீது புகார் கொடுத்தார். எம்எல்ஏ ஆபாச செய்திகளை அனுப்பியதாகவும், நிர்வாண புகைப்படத்தை கோரியதாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி எம்எல்ஏ தனது குடும்பத்தை அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டி சமூக ஊடகங்களில் பாதிக்கப்பட்ட சிறுமி வீடியோ வெளியிட்டார். இதனை தொடர்ந்து எம்எல்ஏவின் கூட்டாளிகள் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து எம்எல்ஏ மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.