ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் சவுத்திரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!
சென்னை: ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் சவுத்திரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் 9 பேரின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் நிறுவனம் ஹிஜாவு நிதி நிறுவனம். மாதம் 15 சதவீத வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் கிட்டத்தட்ட சுமார் ரூ.4620 கோடி முதலீடு பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது. இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் நிர்வாக இயக்குனர் அலெக்ஸ்சாண்டர் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிர்வாக இயக்குனர் என்.சௌந்தர்ராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 9 பேர் ஜாமின் கேட்டும், அதே போல் தலைமறைவாக உள்ள நிர்வாகி ராம்ராஜ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் கிட்டத்தட்ட சுமார் 80 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் சுமார் ரூ.4620 கோடி முதலீடு பெற்று மோசடி செய்துள்ளதாகவும்.
17 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தற்போது புகார்கள் அளித்துள்ளதாகவும் 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கட்டுள்ளதாக கூடுதல் வழக்கறிர் முனியப்பராஜ் வாதிட்டார். வழக்கில் தற்போது ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் சாட்சிகள் கலைக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய இருவருக்கு வழங்கிய ஜாமின் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாகவும் வாதிட்டார்.மோசடி செய்யப்பட்ட பணத்தில் கால் பங்கு கூட மீட்கப்படவில்லை என்று முக்கிய குற்றவாளி அலெக்ஸ்சாண்டர் இன்னும் தலைமறைவாகி உள்ளார் என்றும் பொருளாதார குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தெரிவித்துள்ளதாக கூறி அந்த ஜாமின் வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மனுதாரர்தரப்பில் ஜாமின் வழங்கினால் நீதிமன்ற நியமித்த நிபந்தனைகளுக்கு தயாராக இருப்பதாகவும். பல மாதங்களாக சிறையில் இருப்பதாக அவர்கள் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை ஏற்று நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கி உள்ளார். ஜாமின் கோரிய சவுந்தர் ராஜன் உள்ளிட்ட 9 பேரின் ஜாமினுடனும். முன்ஜாமீன் கோரிய ராமராஜன் முன்ஜாமீன் வரியை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் சொத்து விவரங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி அனுப்புவதற்கான எந்த உத்தரவாதத்தையும் நீதிமன்றத்திலே தாக்கல் செய்யாததன் காரணத்தினால் தற்போது அவர்கள் யாருக்கும் ஜாமின் வழங்கக்கூடாது என்று கோரி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்திருப்புவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.