டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய 95 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு!
Advertisement
மதுரை: டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய 95 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பரமக்குடியில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுபோடும் போராட்டம் நடத்திய 95 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜனநாயக ரீதியில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கவே போராட்டம் நடத்தப்பட்டது என ஐகோர்ட் கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் போராட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தேவையில்லை எனக் கூறி 95 பேர் மீதான வழக்கை ஐகோர்ட் ரத்து செய்தது.
Advertisement