ஐகோர்ட்டுகளில் 330 நீதிபதி பணியிடங்கள் காலி
டெல்லி: 23 உயர்நீதிமன்றங்களில் 330 நீதிபதி பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 1122 நீதிபதி பணி இடங்களில் 330 இடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 160 நீதிபதி பணி இடங்களில் 76 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதி பணி இடங்களில் 19 நிரப்பப்படாமல் உள்ளன.
Advertisement
Advertisement