தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உயர் நீதிமன்றம்தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது: கரூர் கூட்ட நெரிசலில் SIT விசாரணையில் அரசு தரப்பு வாதம்: விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி

 

Advertisement

டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் SIT விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு மனுக்களை விசாரித்தனர். விஜய் மீதான சென்னை உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு எதிராக த.வெ.க. தரப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் வாதம் செய்தார்.

எங்கள் தரப்பில் விளக்கமே கேட்காமல், உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கரூரில் இருந்து போலீசாரின் கட்டாயத்தால் விஜய் வெளியேறினார். பரப்புரை பேருந்தின் அருகே நிறைய வாகனங்கள் வந்தபோது, ஒரு வாகனத்தில் மோதியுள்ளது. என்று த.வெ.க. தரப்பு வாதாடியுள்ளது.

கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடக்கட்டும். முன்னாள் நீதிபதி விசாரணையை மேற்பார்வையிடட்டும். தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை

வழிகாட்டு நெறிமுறைகள் கோரிய வழக்கில் மதுரை அமர்வு, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சென்னை அமர்வு இதனை விசாரிப்பதை மேற்கோள் காட்டி, அங்கு முறையீடு செய்ய அறிவுறுத்தியது. ஒரே வழக்கில் எப்படி இரு உத்தரவுகள்?” என்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்விக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி பதில் அளித்துள்ளார்.

"உயர் நீதிமன்றம்தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை. அஸ்ரா கர்க், சிபிஐயிலும் பணியாற்றியுள்ளார் என்று தமிழ்நாடு அரசு சார்பில் வாதம் செய்தது. அறிவித்த நேரத்துக்கு விஜய் வராததே ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணம். விஜய் பகலில் வருவதாக கூறியதால் காலை 7 மணி முதலே பொதுமக்கள் காத்திருந்தனர்.

கரூர் நெரிசல் வழக்கில் விஜய் இன்று வரை சேர்க்கப்படாத நிலையில் ஆறுதல் கூற அவர் செல்லவில்லை என்று அரசு தரப்பு வாதம் செய்துள்ளது. வாதங்களை விசாரித்த நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார். உணவு இடைவேளைக்காக விசாரணை ஒத்திவைத்துள்ளார். பிற்பகல் 2 மணிக்கு விசாரணை தொடங்கும் என்று அறிவித்துள்ளனர்.

Advertisement

Related News