தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.1,600 அதிகரிப்பால் நகை பிரியர்கள் கலக்கம்

சென்னை: கடந்த 6 நாட்களாக குறைந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் தங்கம் விலை காலை, மாலை என இருமுறை உயர்ந்து பவுனுக்கு ரூ.1600 அதிகரித்ததால் நகைப் பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். உலக சந்தை, அமெரிக்க டாலர் மதிப்பு, பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் போன்ற காரணிகளால் தங்கம் விலை தீர்மானிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி தங்கம் விலை வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் திருமண மாதங்களை நோக்கி நெருங்கும் நேரத்தில் நுகர்வோர்களுக்கு சவாலாக மாறியுள்ளது.

Advertisement

தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 17ம்தேதி கிராம் ரூ.12,200க்கும், ஒரு பவுன் ரூ.97,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் அதாவது, கடந்த மாதம் 28ம்தேதி பவுன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதையடுத்து, இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதிகபட்சமாக நவம்பர் 13ம்தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,900 என்ற இந்த மாதத்திற்கான உச்சத்தை எட்டியது.

ஒரு பவுன் தங்கம் ரூ.95,200 என ஆனது. இதையடுத்து, தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கி விட்டது என சாமானிய மக்கள் கலக்கமடைந்தனர். இந்த நிலையில் தங்கத்தின் விலை சரிவடைய தொடங்கியது. நவம்பர் 17ம்தேதி திங்கட்கிழமை கிராமுக்கு ரூ.10 குறைந்து சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.11,540க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமையான நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.140 என தடாலடியாக குறைந்து ரூ.11,400க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்படி கடந்த 6 நாட்களாக சரிந்து வந்த நிலையில் நேற்று திடீரென உயர்ந்துள்ளது.

கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,500 குறைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விலை குறைவு நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று காலை திடீரென தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,540க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,320க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை நேற்று 2வது முறையாக மீண்டும் உயர்ந்து அதிரடி காட்டியது.

நேற்று காலை பவுனுக்கு ரூ.800 கூடிய நிலையில், மதியம் மேலும் ரூ.800 கூடியது. தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,600க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1600 உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதனால் கலக்கமடைந்த நகைப் பிரியர்கள் தங்கத்தை இனி கனவில் தான் வாங்க முடியுமோ என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Related News