ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க கோரும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது : தலைமை நீதிபதி திட்டவட்டம்
12:05 PM Mar 06, 2024 IST
Share
சென்னை :ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க கோரும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அரசு வழக்கறிஞர் எட்வின் பிரபாகருக்கு தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி பிப்.28 முதல் வழக்கறிஞர் பகவத் சிங் தலைமையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.