உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து விடுதலையானார் ஹேமந்த் சோரன்..!!
04:16 PM Jun 28, 2024 IST
Share
ஜார்க்கண்ட்: உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து சிறையில் இருந்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் விடுதலையானார். நில மோசடி தொடர்பான வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி ஹேமந்த் சோரனை அமலாக்கப்பிரிவு கைது செய்தது. கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரனுக்கு இன்று ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.