ஹீரோ எச்எப் டீலக்ஸ் புரோ
ஹீரோ நிறுவனம், எச்எப் டீலக்ஸ் புரோ மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 97.2 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 7.7 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 8.05 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும் இதில் ஐ3எஸ் தொழில்நுட்பம் உள்ளது. இது எரிபொரள் சிக்கனத்தை மேம்படுத்த உதவும்.
ஹீரோ எச்எப் வேரியண்டில் பிரீமியம் டாப் வேரியண்டாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முக்கிய மாற்றங்களில் ஒன்றாக, எல்இடி ஹெட்லாம்ப் மற்றும் கிரவுன் வடிவ அதிக திறன் கொண்ட விளக்கும் இடம் பெற்றுள்ளது. பின்புறம் மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடிய சஸ்பென்ஷன், 18 அங்குல டியூப்லெஸ் டயர்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.73,550 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.