ஹெர்பல் காஜல் !
தேவையான பொருட்கள்
சந்தனப் பொடி - 2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
விளக்கெண்ணெய் - 2 ஸ்பூன்
பாதாம் பருப்பு - 2
களிமண் விளக்கு - 1
காட்டன் துணி.
செய்முறை:
*முதலில் சந்தனப் பொடியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கலக்கிக்கொள்ளுங்கள். அதில் காட்டன் துணியை நன்றாக நனைத்து வெயிலில் சிறிது நேரம் காயவிடவும். இப்போது, உலர்ந்த துணியை விளக்குத் திரி போன்று உருட்டிக்கொள்ளுங்கள். தயார் செய்த திரியை களிமண் விளக்கில் வைத்து அதோடு நெய் சேர்த்து விளக்கை (பூஜை அறையில் வழக்கம்போல் தீபம் ஏற்றுவது போல) ஏற்றவும்.
* பின்னர் விளக்கை ஒரு தட்டில் வைத்து அதை சுற்றிலும் நான்கு சில்வர் அல்லது கண்ணாடி டம்ளர்களை வைத்து, அதன்மீது சில்வர் தட்டு ஒன்று கவிழ்த்து விடவும். அதற்கு முன்பு சில்வர் தட்டு முழுவதும் விளக்கெண்ணெயை தடவிக் கொள்ளுங்கள். விளக்கு முழுவதும் எரிந்தவுடன் அந்தத் தட்டை எடுத்துப்பார்த்தால், கரி படிந்திருக்கும். அதை ஒரு கத்தியை கொண்டோ அல்லது ஸ்பூனை பயன்படுத்தியோ சுரண்டி ஒரு சிறிய பாத்திரத்தில் சேமித்து கொள்ளுங்கள். இப்போது, நாம் எடுத்துவைத்துள்ள இரண்டு பாதாம் பருப்பை அடுப்பில் காட்டி தீய வைத்துக் கொள்ளுங்கள்.
*அதை ஒரு கரண்டியைக் கொண்டு நசுக்கினால், பவுடர் போல நொறுங்கும். அந்த பவுடரை நாம் தயாரித்து வைத்த கரியில் சேர்த்து 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளவும். உங்களுக்கு எந்த பதத்திற்கு வேண்டுமோ அந்தளவிற்கு விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் கருமையான இயற்கையான கண் மை தயார். இதை ஒரு சிறிய பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி டப்பாவில் சேகரித்து தினமும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்.
- நந்தினி