கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உதவிப்பெட்டி வைக்கப்படும்; கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி
08:57 AM Aug 10, 2025 IST
கேரள: கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உதவிப்பெட்டி வைக்கப்படும் என கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி அறிவித்துள்ளார். அதில், மாணவ - மாணவியர் தங்களுக்குரிய பிரச்னைகளை எழுதி போடலாம்; வாரத்திற்கு ஒரு முறையேனும், உதவிப்பெட்டியை பள்ளி தலைமையாசிரியர் திறந்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.