தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிஐஎஸ் தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: ஒன்றிய அரசு!

டெல்லி: பிஐஎஸ் தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய சாலைகளில் 21 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதால், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மோட்டார் வாகனச் சட்டம்-1988-ன் கீழ் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். அந்த தலைக் கவசங்களுக்கு, செயல்திறன் தர மதிப்பீடும் உள்ளது.
Advertisement

தரமற்ற தலைக்கவசங்கள் பாதுகாப்பு அம்சங்களை விட்டுக் கொடுத்து விடுவதால் சாலைப் பாதுகாப்பு என்ற நோக்கத்தை சிதைப்பதாக அவை இருக்கின்றன. இதை நிவர்த்தி செய்வதற்காக, 2021-ம் ஆண்டு முதல் தரக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் உள்ளது. இது அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும் பிஐஎஸ் தரநிலைகளின் கீழ் (ஐஎஸ் 4151:2015) சான்றளிக்கப்பட்ட, ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட தலைக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஜூன் 2025 நிலவரப்படி, இந்தியா முழுவதும் 176 உற்பத்தியாளர்கள் தலைக்கவசங்களுக்கான பிஐஎஸ் உரிமங்களை வைத்திருக்கின்றனர். சாலையோரங்களில் விற்கப்படும் பல தலைக்கவசங்களுக்கு பிஐஎஸ் சான்றிதழ் இல்லை. இவை தரமற்றதாக இருக்க கூடும் என்பதால் நுகர்வோருக்கு சாலை விபத்துகள் ஏற்பட்டால் நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாமல் போகும். எனவே, இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தரநிலைகளைச் செயல்படுத்த, பிஐஎஸ் அமைப்பு வழக்கமான தொழிற்சாலை மற்றும் சந்தை கண்காணிப்பை மேற்கொள்கிறது. இதன் மூலம் தரமற்ற தலைக் கவசங்கள் உற்பத்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தரமற்ற தலைக்கவசங்களை சந்தையில் இருந்து அகற்றுவதன் மூலம், சாலை விபத்தால் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதையும், உயர்தர பாதுகாப்பு உபகரணங்களை ஊக்குவிப்பதையும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Advertisement

Related News