தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடையும் உயரமும்..!

ஒவ்வொரு உடைக்கும் ஒரு பெயர் உண்டு. ஒவ்வொரு உடையின் வடிவங்களுக்கும் ஏற்ப வகைகளும் உண்டு. அதே போல் நாம் உடுத்தும் உடைகளின் உயரங்களின் அளவுகளுக்கே பல பெயர்கள் உண்டு என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும். அது தெரியாமல் தான் கொஞ்சம் சொல்லேன் என ‘‘ChatGPT’’ யிடம் கேட்டபோது இந்தப் பிடி என உயரங்களையும், அதன் பெயர்களையும் ஆங்கிலத்தில் அடுக்கியது . மேலாடை, ஸ்கர்ட், பேண்ட் என அனைத்திலும் அதன் உயரங்களுக்கு ஏற்ப பெயர்கள் மாறும். நீளத்தின் அடிப்படையில் இடுப்பிலிருந்து காலின் எந்த அளவுக்கு வருகிறது என்பதைப் பொறுத்து ஒவ்வொரு உடைக்கும், ஒவ்வொரு ஸ்டைல், ஒவ்வொரு பெயர். இதோ முழுமையான பட்டியல்.

Advertisement

*மைக்ரோ ஸ்கர்ட் (Micro Skirt) - மிகச் சிறிய நீளம்; தொடைக்கு மேல் பகுதி வரை மட்டும் வரும். மாடர்ன் மங்கைகளின் சாய்ஸ்.

*மினி ஸ்கர்ட் (Mini Skirt) - தொடையின் நடுப்பகுதி வரை வரும்; டிரெண்டியான, இளமையான தோற்றம் கொடுக்கும்.

*முட்டிக்கு மேல் ஸ்கர்ட் (Above-knee Skirt) - முழங்காலுக்கு மேலே, தொடைப் பகுதியை முழுமையாக மூடி கீழ்ப்பகுதியில் முடியும்; யூனிஃபர்ம் ஸ்கர்ட்கள், அலுவலக ஃபார்மல் உடைகள், பென்சில் ஸ்கர்ட்கள் அதிகம் இந்த வகைகளில் அணியப் படுவதுண்டு.

*முழங்கால் ஸ்கர்ட் (Knee-length Skirt) - துல்லியமாக முழங்கால் அளவில் முடியும்; கிளாசிக் விண்டேஜ் ஸ்டைல். குறிப்பாக மேற்கத்திய கலாச்சாரத்தில் மர்லின் மன்றோ ஃபேஷன் என இந்த முழங்கால் ஸ்கர்ட்களை அழைப்பதுண்டு.

*மிடி ஸ்கர்ட் (Midi Skirt) - முழங்காலுக்கு கீழே, கெண்டைக் காலின் மேல் பகுதி வரை வரும். நதியா, அமலா போன்றவர்கள் இந்த வகை ஸ்கர்ட் அதிகம் அணிந்து பார்த்திருப்போம். இவை கியூட், மாடர்ன் அதே சமயம் இந்திய ஃபேஷன் கட்டுப்பாட்டிலும் அடங்கும்.

* டீ உயர ஸ்கர்ட் (Tea-length Skirt) - கணுக்காலுக்கு மேல் கெண்டைக் காலின் இடைப்பட்ட உயரத்தில் முடியும்; இவை 1980களில் மிகப்பெரும் டிரெண்ட்..

*length / Maxi Skirt) (கால் கணுக்கால்) வரை வரும். குழந்தைகளுக்கான பட்டுப் பாவாடைகள், இரவு உடைகளான நைட்டி, போன்றவை இந்த வகை நீளத்தில் இருக்கும். மேக்ஸி கவுன், நீளமான ஜீன்ஸ் ஸ்கர்ட்கள் இந்த உயரத்தில் வடிவமைக்கப்படும்.

*தரை நீள ஸ்கர்ட் (Floor-length Skirt / Gown) - தரையைத் தொட்டுவரும் நீளம். திருமண கவுன்கள், பார்டி கவுன்கள், பாவாடை தாவணி உடைகள், குறிப்பாக பிரபலங்களின் விழா கவுன்கள் இந்த நீளத்தில் தைக்கப்படும்.சுருக்கமாக இவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம்

*குறுகியவை *Micro, Mini

*நடுத்தர உயரம்*Above-knee, Knee-length, Midi, Tea-length

*நீளமானவை *Maxi / Ankle-length, Floor-length

அவையே பாட்டம் வேர்களில் பேன்கள் , டிரவுசர்கள், வகை எனில் அவற்றை உயரத்தின் அடிப்படையில் எப்படி வகைப்படுத்துகிறது ஃபேஷன் உலகம்.

*ஷார்ட்ஸ்(Shorts) - தொடை (thigh) பகுதி வரை மட்டும் வரும் குறுகிய பேண்ட்ஸ்.

*ஹாட் பேண்ட்ஸ் (Hotpants) - மிகவும் குறுகிய , தொடைக்கும் மேல் முடிவடையும் பேண்ட்ஸ். இவை 2K பெண்களிடம் பிரபலம். இரவு நேர பாட்டம்களிலும் இவை பயன்படுத்தப்படுவதுண்டு.

*பெர்முடா ஷார்ட்ஸ் (Bermuda Shorts) - முழங்காலுக்கு மிகச் சரியாக மேலே (just above knee) முடியும், சுற்றுலா, பயணம், மலையேற்றம், முதல், ரிலாக்ஸ் ஃபிட்டாக அணிய விரும்புவோரின் சாய்ஸ் இந்த பெர்முடா ஷார்ட்ஸ்.

*பெடல் புஷ்ஷர் (Pedal Pushers) - முழங்காலுக்கு கீழே (calf) வரை வரும். சரியாக கால் முட்டியில் சப்போர்ட் கொடுப்பது போல் இருக்கும் இந்த வகை பாட்டம்கள் உடற்பயிற்சி, சைக்கிள், விளையாட்டு உடைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும். குறிப்பாக சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு முழங்கால் பாதுகாப்பு போல் இந்த பேண்ட்கள் இருக்கும்.

*கேப்ரி பேண்ட்ஸ் (Capri Pants) - முழங்காலுக்கு கீழே, கெண்டையின் நடுப்பகுதி வரை முடியும். கோடைகால உடைகளில் இவ்வகை பேண்ட்கள் அதிகம் பார்க்கலாம். லூஸாக பெரிதாக அணிந்தால் சுற்றுலா, ரிலாக்ஸ் உடை வகைகளாக பயன்படும்.

*கிராப்ட் பேண்ட் (Cropped Pants) - சமீபத்திய டிரெண்ட். லெக்கிங்ஸ், ஜெக்கிங்ஸ், முதல், ஆண்கள் கூட தங்களது ஜீன்ஸ், காட்டன் பேண்ட் என இந்த கணுக்கால் அளவை விரும்பத் துவங்கி விட்டனர். கால் கணுக்காலுக்கு (ankle) மேல் வரை இந்த பாட்டம்கள் வடிவமைக்கப்படும். இந்த வகை பேண்ட் களின் வருகையால், நீளமான பேண்ட்களுக்கு மவுசு குறைந்துவிட்டது. குறிப்பாக இந்த பாட்டம்கள், கால் அழகையும், காலணிகளின் அழகையும் கூடுதலாக ஹைலைட் செய்யும். மாடர்ன் அலுவலக உடை. அணிபவரின் உயரத்தையும் கூட்டுவதோடு, சற்று மெலிந்த தோற்றத்திலும் காட்டும்.

* 7/8 பேண்ட் (7/8 Pants) - கால் நீளத்தின் எட்டு பங்கில் ஏழு பிட் (ankle- just above). ஸ்லிம் ஃபிட் பாட்டம்கள்.

*கணுக்கால் நீளம் (Ankle-length Pants) - கால் கணுக்கால் வரை துல்லியமாக வரும்; தற்போது மிகவும் பொதுவான மாடர்ன் பாட்டம்கள் இவை.

*எப்போதுமான நீளமான பேண்ட்ஸ் (Regular / Full-length Pants) - காலின் முழு நீளம் மூடி, செருப்பு அளவில் முடியும். பழங்கால தையல் முறை பாட்டம்கள்.

*பூட் கட் (Bootcut / Floor-length Trousers) - கால்வரை நீண்டுமுட்டிக்குக் கீழே சிறிது அகலமாக வரும். ஃபேஷன் நிகழ்ச்சிகள், உயரமான ஹீல் காலணிகள் அணிவோரின் சாய்ஸ் இந்த பூட் கட்.

*பலாஸ்ஸோ (Palazzo / Wide-leg Floor-length) - தரையைத் தொட்டுவரும் நீளமான, அகலமான பேண்ட்ஸ். இந்திய சல்வார்கள் துவங்கி, இன்று பல வகைகளில் இந்த பலாஸ்ஸோ ஃபிட் அதிகரித்து விட்டன. ஜீன்ஸ் பேன்ட்கள் கூட இந்த வகையில் காண முடிகிறது.

*மேலாடைகளின் உயரம் இதனை ஹெம்லைன் (hemline) என ஃபேஷன் உலகம் குறிப்பிடும். அதாவது மேலாடைகள் முடியும் இடம். கவுன், குர்தா, குர்தி, டாப்கள், என அனைத்தும் இந்த ஹெம்லைன் உயரம் பொருத்து உடையின் பெயரே மாறும்.

*கிராப் டாப் (Crop Top) - இடுப்புக்கு மேல் (waist) மேல், பல நேரங்களில் நாபிக்கு (navel) மேல் காணப்படும் அளவு.

*பிராலெட்/பஸ்டியர் டாப் (Bralette / Bustier Top) - மிகவும் சிறிய, மார்பு பகுதியை மட்டும் மூடும் வகை, உள்ளாடை, லெஹெங்கா, ஜாக்கெட்கள், போன்றவை இந்த அளவில் அணிகிறோம்.

*வெய்ஸ்ட் டாப்(Waist-length Top) - இடுப்பு (waist) வரை முடியும்; சாதாரண டி-ஷர்ட்கள், சட்டைகள், டாப்கள் இந்த அளவின் அடிப்படையில் வடிவமைக்கப்படும்.

*இடுப்பளவு (Hip-length Top ) - இடுப்புக்கு (hips) கீழே முடியும். டாப்கள், காட்டன் குர்திகள், ஃபார்மல் சட்டைகள், கேஷுவல் வேர் டிஷர்ட்கள் இந்த நீளத்தில் வடிவமைக்கப்படும்.

*டியூனிக் (Mid-thigh Length Tunic) - தொடையின் நடுப்பகுதி வரை வரும். இந்தியப் பெண்கள் பலருக்கும் ஜீன்ஸ்க்கு டாப் என்றால் இந்த டியூனிக் வகைகள்தான்.

*முட்டி அளவு டியூனிக்/குர்தி (Knee-length Kurti / Tunic) - முழங்கால் அளவில் முடியும். இண்டொ வெஸ்டர் டாப்கள், சராரா, சஹாரா போன்ற உடைகளின் டாப்கள் ஓவர் கோட் வகைகள் இந்த உயரத்தில் இருக்கும்.

*குர்தா/ சல்வார் கமீஸ் (Above-knee / Dress-top) - முழங்காலுக்கு மேலே முடியும். லெக்கிங்ஸ், ஜெக்கிங்ஸ், ஜீன்ஸ் உடன் அலுவலக, கல்லூரி பெண்கள் அணியும் குர்தாக்கள், சல்வார் கமீஸ் , சுடிதார் அளவு டாப்களும் இந்த அளவைக் கொண்டுதான் வடிவமைக்கப்படும். சுருக்கமாக இவற்றை மூன்று வகைகளில் அடக்கலாம்.

*குறுகிய மேல் உடைகள் * Crop top, bralette, bustier

*நடுத்தர நீளங்கள் * Waist-length, Hip-length tops, tunics

*நீளமானவை / Dress-style tops *Mid-thigh, Knee-length, Midi, Maxi

- ஷாலினி நியூட்டன்

Advertisement

Related News