சென்னை: விஜயவாடா-காசிபேட் இடையே ராயனப்பாடு நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரயில்கள் மாற்று வழியில் இயக்கம். ஹவுரா - பெங்களூரு விரைவு ரயில் விஜயவாடா வழியாக இயக்கம் தடேபள்ளிகுடேம், எலுரு நிலையங்களில் ரயில் நிற்காது. திப்ரூகர் - கன்னியாகுமரி விவேக் விரைவு ரயில் விஜயவாடா வழியாக இயக்கம்-எலுருவில் ரயில் நிற்காது. ஹவுரா-சென்னை சென்ட்ரல் ரயில் விஜயவாடா வழியாக இயக்கம், 2 நிலையங்களில் ரயில் நிற்காது என அறிவித்துள்ளனர். சென்னை சென்ட்ரல் - சந்திரகாச்சி விரைவு ரயில் விஜயவாடா வழியாக இயக்கம், தடேபள்ளிகுடேமில் ரயில் நிற்காது. சென்னை சென்ட்ரல் - நிஜாமுதீன் ராஜ்தானி விரைவு ரயில் விஜயவாடா வழியாக இயக்கம்.