பட்டுக்கோட்டையில் பலத்த காற்றுடன் கனமழை சாலையில் பெருக்கெடுத்த தண்ணீர்
தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கடந்த 7 ஆம் தேதி கடுமையான மழை பெய்தது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டவ கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது.
அதன் அடிப்படையில்10 நாட்களுக்கு பிறகு பட்டுக்கோட்டையில் சுமார் 8 மணி அளவில் பலத்த கற்று வீசியது. லேசான மின்னலுடன் கனமழை பெய்தது பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லையென்ற சுழலில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
அரைமணிநேரம் பலத்த கனமழை பெய்தது. பட்டுக்கோட்டை நகர் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள், வியாபாரிகள், விவசாயிகள் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பட்டுக்கோட்டை மட்டும் அல்லாமல் அதிரம்பட்நம் பகுதியில் பலத்த கன மழை பெய்தது. இந்த மழையால் வெயிலுடைய வெப்பம் தணிந்த நிலையில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுருக்கிறது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.