கன மழையால் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி
அங்காடி நிர்வாகம் சார்பில் ராட்சத மோட்டார் மூலம் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று காலை அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அதேபோல மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியையும் பார்வையிட்டு அந்த பகுதியில் மோட்டார் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளையும் பார்வைட்டார். மழைநீர் தேங்காதவாறு சுழற்சி முறையில் ஊழியர்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தொடர்ந்து விடாமல் பெய்து வரும் மழையால் கோயம்பேடு மார்க்கெட் வளாகம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்காடி நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் ராட்சத மோட்டார் மூலம் அகற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இருந்தாலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழை என்று கூட பார்க்காமல் அங்காடி நிர்வாக அதிகாரிகள் மழை நரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.