தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்க்கும் கனமழை; டெல்டாவில் 93,000 ஏக்கர் பயிர்கள் மூழ்கின; பல இடங்களில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 16ம்தேதி வடகிழக்கு பருவமழை துவங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு முதலும், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதலும் மழை பெய்தது. பகலிலும் மழை நீடித்தது. திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் 93 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட குறுவை, சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் சம்பா மற்றும் தாளாடி நாற்றுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

Advertisement

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வைரிசெட்டிபாளையம் அருகே ஜம்பேரி ஏரி, பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பெரிய ஏரி, பெரம்பலூர் மாவட்டத்தில் திருவாளந்துறை ஏரி, வெண்பாவூர் ஏரி உள்ளிட்ட 28 ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இடைவிடாமல் கொட்டிய மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 99 மி.மீ மழை பதிவானது. குறிஞ்சிப்பாடி அருகே அயன் குறிஞ்சிப்பாடி, ரெட்டிப்பாளையம், குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2500 ஏக்கர் கம்பு பயிர் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழையால் உடைந்து சேதமடைந்தன.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்டும், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள கோமுகி அணையின் நீர்மட்டம் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 39 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 150 கனஅடி நீர்வரத்து இருந்தது. இன்னும் ஓரிரு நாளில் பாசனத்திற்கு திறக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளப்பெருக்கு காரணமாக கல்வராயன்மலை, பெரியார் நீர் வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே கெத்தை பகுதியில் விடிய, விடிய கொட்டிய கன மழையில் கெத்தை மின் நிலைய யார்டு பகுதியின் மேற்புறமிருந்து பெரிய, ராட்சத பாறைகள் உருண்டு துணை மின் நிலையத்தில் விழுந்தது. இதனால் அங்கு இருந்த பிரேக்கர் உள்ளிட்ட முக்கிய மின் கருவிகள் சேதம் அடைந்தது. இதனால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் சேதம் அடைந்த கருவிகளை மாற்றி மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாலையில் பறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் ஊட்டி - குன்னூர் சாலை பாய்ஸ் கம்பெனி பகுதியில் சிறு மண்சரிவு ஏற்பட்டு அகற்றப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 13 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 8300 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திம்பம் மலைப்பாதையில் 7, 8, 20 மற்றும் 27வது கொண்டை ஊசி வளைவுகளில் 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

அதிகாரிகள் வந்து மண் மற்றும் கற்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். நேற்று காலை 10 மணி அளவில் சாலை சீரமைக்கப்பட்டது. பண்ணாரி வனப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வனப்பகுதியில் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்றில் அடித்து வரப்பட்ட மரம், செடி கொடிகள் சத்தியமங்கலத்தில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் சாலையில் தாண்டாம்பாளையம் அருகே உள்ள பாலத்தில் சிக்கியதால் பாலத்தின் இருபுறமும் சாலை அரிப்பு ஏற்பட்டதோடு வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தன.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுவட்டார பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை காரணமாக அமராவதி, திருமூர்த்தி அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. திருமூர்த்திமலை மீதுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கால், அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள கன்னிமார் சாமிகளின் சிலைகளை மூழ்கடித்து மண்டபத்தை இடித்து தள்ளியது. அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், நகர் பகுதியில் உக்கடம், டவுன்ஹால், குனியமுத்தூர், ராமநாதபுரம், பீளமேடு, காந்திபுரம், கவுண்டம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

தென் மாவட்டங்களில்: மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. பாளையங்கோட்டையில் மழை காரணமாக 50 ஏக்கரில் நெற்பயிர் சேதமடைந்தது. தென்காசி மாவட்டம், ராமநதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்தது. குமரி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் கோட்டை அகழி சுவர் இடிந்தது: வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வேலூர் கோட்டை அகழியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் கோட்டை அகழியின் மேற்கு பகுதியில், அதாவது வேலூர் டவுன் ரயில் நிலையம் நேர் எதிரில் 10 முதல் 15 மீட்டர் நீளத்திற்கு அகழியின் கரையில் கட்டப்பட்ட கருங்கற்களால் ஆன கரைச்சுவர்கள் சரிந்து விழுந்தன. தகவல் அறிந்து இந்திய தொல்லியல்துறை சென்னை வட்ட உயர்அதிகாரிகள் வேலூர் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

வெள்ளத்தில் மிதக்கிறது ராமேஸ்வரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பகலாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் தீவில் தொடர்ந்து பெய்த கனமழையால் ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரை தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். குடியிருப்புப் பகுதிகள் நீரில் மிதக்கின்றன. மண்டபத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. மேலும் மண்டபம் கலைஞர் நகர் பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால், சிலர் மாடிகளில் தஞ்சம் அடைந்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி, கம்பம் அருகே சுருளி அருவி, வருசநாடு அருகே சின்னசுருளி அருவிகளில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. ராமேஸ்வரத்தில் 95 மி.மீ மழையும், தங்கச்சிமடத்தில் 170 மி.மீ, பாம்பன் 113 மி.மீ மழையும் பதிவானது. மாவட்டத்திலயே அதிகபட்சமாக தங்கச்சிமடத்தில் 17 செ.மீ மழை பதிவானது.

பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய குழந்தை உட்பட 17 பேர் மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியம் மல்லகுண்டா அருகே தமிழக- ஆந்திர எல்லையான மரிமென்ரேவு அருகே செல்லும் பாலாற்று பகுதியையொட்டி காட்டு கோயில் உள்ளது. நேற்று முன்தினம் தீபாவளியையொட்டி இங்குள்ள அம்மனை தரிசனம் செய்வதற்காக அருகிலுள்ள பகுதியை சேர்ந்த 6 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 17 பேர் பாலாற்றை கடந்து சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்தவர்கள் சமைத்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் பாலாற்றை கடக்க முயன்றனர். அப்போது பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததால், கரையோரம் தவித்தபடி நின்றிருந்தனர்.

வெள்ளப்பெருக்கை காண மறுபுறம் கரையில் வந்திருந்த மக்களிடம் சைகை மூலம் உதவி கேட்டனர். தகவலின்பேரில் நாட்றம்பள்ளி தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் திம்மாம்பேட்டை போலீசார் இணைந்து பாலாற்றின் குறுக்கே கயிறு கட்டி, தற்காப்பு உபகரணங்களுடன் குழந்தை உட்பட 17 பேரை பத்திரமாக மீட்டனர்.

நடப்பாண்டில் 7வது முறையாக முழு கொள்ளளவு எட்டிய மேட்டூர் அணை

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு, மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, நேற்று முன்தினம் (20ம் தேதி) மாலை நடப்பு ஆண்டில் 7வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் 120 அடியாக நிரம்பியது. நீர்வரத்து நேற்று மாலை 35,500 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நீர்மின் நிலையங்கள் வழியாக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 22,300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அணையின் இடது கரையிலுள்ள உபரிநீர் போக்கி வழியாக, விநாடிக்கு 12,700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 10ம் தேதி மூடப்பட்ட உபரிநீர் போக்கி, 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு மீண்டும் திறக்கப்பட்டது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக, விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. சுரங்க மின் நிலையம், அணை மின் நிலையம் மற்றும் 7 கதவணைகளில் மின் உற்பத்தி துவங்கியது. இதேபோல ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை 6 மணிக்கு 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவிகள் மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

வைகை நிரம்பியது

தொடர்மழையால் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியது. வைகை அணை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த 67 ஆண்டுகளில் 36வது முறையாக நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. முதல் கட்டமாக வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் வைகை அணையின் பிரதான ஏழு மதகுகள் வழியாக திறக்கப்பட்டது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் அணை முன்பாக இரண்டு பூங்காக்களையும் இணைக்கும் தரைப்பாலம் முழுவதுமாக தண்ணீருக்குள் மூழ்கியது.

கொடைக்கானல் அருகே அருவியில் மூழ்கி மருத்துவ மாணவர் பலி

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் நந்தகுமார் (21). கோவையில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நண்பர்கள் 11 பேருடன், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு கடந்த 18ம் தேதி சுற்றுலா வந்தார். வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறை கிராமம் அருகில் உள்ள அஞ்சுவீடு அருவியில் குளித்து கொண்டிருந்த நந்தகுமார், திடீரென நீரில் மூழ்கி மாயமானார். நண்பர்கள் அளித்த தகவலின்படி, கடந்த 3 நாட்களாக தேடும் பணி நடந்தது. ஸ்கூபா டைவிங் வீரர்களுடன், திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். 4ம் நாளாக நேற்று அருவியில் இருந்து சுமார் ஒரு கிமீ தூரத்தில் நந்தகுமார் சடலத்தை தீயணைப்பு படையினர் மீட்டு, டோலி கட்டி சரிவான பாறை பகுதியில் இருந்து அருவியின் மேற்பகுதிக்கு கொண்டு வந்தனர்.

வெள்ளத்தில் மிதக்கிறது ராமேஸ்வரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பகலாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் தீவில் தொடர்ந்து பெய்த கனமழையால் ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரை தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். குடியிருப்புப் பகுதிகள் நீரில் மிதக்கின்றன. மண்டபத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. மேலும் மண்டபம் கலைஞர் நகர் பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால், சிலர் மாடிகளில் தஞ்சம் அடைந்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி, கம்பம் அருகே சுருளி அருவி, வருசநாடு அருகே சின்னசுருளி அருவிகளில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. ராமேஸ்வரத்தில் 95 மி.மீ மழையும், தங்கச்சிமடத்தில் 170 மி.மீ, பாம்பன் 113 மி.மீ மழையும் பதிவானது. மாவட்டத்திலயே அதிகபட்சமாக தங்கச்சிமடத்தில் 17 செ.மீ மழை பதிவானது.

பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய குழந்தை உட்பட 17 பேர் மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியம் மல்லகுண்டா அருகே தமிழக- ஆந்திர எல்லையான மரிமென்ரேவு அருகே செல்லும் பாலாற்று பகுதியையொட்டி காட்டு கோயில் உள்ளது. நேற்று முன்தினம் தீபாவளியையொட்டி இங்குள்ள அம்மனை தரிசனம் செய்வதற்காக அருகிலுள்ள பகுதியை சேர்ந்த 6 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 17 பேர் பாலாற்றை கடந்து சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்தவர்கள் சமைத்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் பாலாற்றை கடக்க முயன்றனர். அப்போது பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததால், கரையோரம் தவித்தபடி நின்றிருந்தனர். வெள்ளப்பெருக்கை காண மறுபுறம் கரையில் வந்திருந்த மக்களிடம் சைகை மூலம் உதவி கேட்டனர். தகவலின்பேரில் நாட்றம்பள்ளி தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் திம்மாம்பேட்டை போலீசார் இணைந்து பாலாற்றின் குறுக்கே கயிறு கட்டி, தற்காப்பு உபகரணங்களுடன் குழந்தை உட்பட 17 பேரை பத்திரமாக மீட்டனர்.

Advertisement

Related News