தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுகாதார பணியாளர் உதவி மையம்: சென்னை மாநகராட்சி டெண்டர் வெளியீடு

Advertisement

சென்னை: சென்னை மாநகராட்சிஅதன் 200 பிரிவு அலுவலகங்களில் சுகாதாரப் பணியாளர்களின் நலனுக்காக உதவி மையங்கள் அமைக்க ரூ.60.70 லட்சம் செலவிட உள்ளது. இந்த மையங்களில் இணைய வசதியுடன் கூடிய 200 டெஸ்க்டாப் கணினிகள் மற்றும் 200 பிரிண்டர்களை மூன்று மாதங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்குவதற்கு தகுதியான நிறுவனத்தைத் தேர்வு செய்ய மாநகராட்சி டெண்டர் வெளியிட்டுள்ளது. “டெஸ்க்டாப் கணினிகள், லேப்டாப்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை வழங்குவதில் அனுபவம் உள்ள நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்கலாம். இம்மாத இறுதிக்குள் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு, கணினிகள் மற்றும் பிற வசதிகளை நிறுவும் பணி தொடங்கப்படவுள்ளது.

இந்த உதவி மையங்கள், மாநகராட்சியின் நிரந்தர ஊழியர்கள், 17,600-க்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள், தனியார் முகமைகள் மூலம் பணியமர்த்தப்பட்டவர்கள் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் போன்ற திட்டங்களில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவும். மாநில அரசு வழங்கும் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு இந்த மையங்கள் உதவி புரியும். விபத்து காப்பீடு, இறப்பு மற்றும் இறுதிச் சடங்கு உதவி, ஓய்வூதியம், மகப்பேறு பயன்கள் போன்றவற்றைப் பெறுவதற்கும் இந்த மையங்கள் உதவும்,சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சி, சுகாதாரப் பணியாளர்களின் நலனை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement