அரியானாவில் தற்கொலை செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு தகனம்
சண்டிகர்: அரியானா காவல்துறை உயரதிகாரியான ஐபிஎஸ் அதிகாரி புரான் குமார் கடந்த 7ம் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில், அரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் உட்பட 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சாதிய பாகுபாடு காட்டி, துன்புறுத்தியதாக கூறியிருந்தார். இதனால் தற்கொலைக்கு தூண்டிய 8 அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டுமென வலியுறுத்திய புரான் குமாரின் மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியுமான அம்னீத், அதுவரை தனது கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டார். தவறு செய் தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததால் பிரேத பரிசோதனை நடத்த அம்னீத் சம்மதித்தார். இதனால் 8 நாட்களுக்குப் பின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர். அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement