ஹரியானா தேர்தல் முடிவு தாமதமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
12:50 PM Oct 08, 2024 IST
Share
Advertisement
சண்டிகர் : ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் முடிவுகளை இணையதளத்தில் தாமதமாக பதிவேற்றுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி முறையீடு செய்துள்ளது. தேர்தல் முடிவுகளை உடனடியாக பதிவேற்றம் செய்ய உத்தரவிட வலியுறுத்தி தலைமை தேர்தல் ஆணையரிடம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் அளித்துள்ளார்.