புரோ கபடி லீக் தொடர்: அரியானா, ஜெய்ப்பூர் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி
புதுடெல்லி: 12 அணிகள் பங்கேற்றுள்ள 12வது சீசன் புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று தமிழ்தலைவாஸ் தனது கடைசி லீக் போட்டியில் 43-44 என பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் வீழ்ந்தது. 18 போட்டியில் 6 வெற்றி, 12வது தோல்வி என 12 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் நடையை கட்டியது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் யு மும்பா 37-36 என ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை சாய்த்தது. இரவு 9.30 மணிக்கு நடந்த 102வது லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் 50-32 என குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை பந்தாடியது. 17வது போட்டியில் 9வது வெற்றியை பெற்ற அரியானா பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
குஜராத் 11வது போட்டியில் 11வது தோல்வியுடன் வாய்ப்பை இழந்த நிலையில், ஜெய்ப்பூர் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு கிடைத்தது. இன்று இரவு 7.30 மணிக்கு அரியானா-தெலுங்கு டைட்டன்ஸ், இரவு 8.30 மணிக்கு பெங்களூரு புல்ஸ்-பெங்கால் வாரியர்ஸ், இரவு 9.30 மணிக்கு தபாங் டெல்லி-பாட்னா மோதுகின்றன. நாளையுடன் லீக் சுற்று முடிவடைகிறது.