ஹரியானாவில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி தற்கொலை!!
சண்டிகர்: ஹரியானாவில் தற்கொலை செய்த ஐபிஎஸ் அதிகாரி பூரண்குமார் மீதான ஊழல் புகார்களை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். ரோடக் அருகே விவசாய நிலத்தின் நடுவே உள்ள ஒரு கட்டடத்தில் காவல் உதவி ஆய்வாளர் சந்தீப் குமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்டன. லதோட் என்ற கிராமத்தில் இறந்து கிடந்து உதவி எஸ்.ஐ. உடலின் அருகிலேயே 3 பக்க கடிதம் ஒன்றும் சிக்கியது. சந்தீப் குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உண்மைக்காக வாழ்க்கையை தியாகம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement