தீபாவளி மகிழ்ச்சி, செழிப்பை கொண்டுவரட்டும்: குடியரசு தலைவர் வாழ்த்து
புதுடெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ தீபாவளி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,\\”இந்த பண்டிகை, ஏழைகளுக்கு உதவவும், ஆதரவு அளிக்கவும், அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வருவதற்கும் ஒரு வாய்ப்பாகும். தீபாவளியானது பரஸ்பர பாசம் மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை அளிக்கிறது. இந்த தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பை கொண்டுவரட்டும்\\” என தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement