வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி குழுமத்தில் 142 மாணவர்களின் கைப்புத்தகம் வெளியீடு
சென்னை: சென்னை ஆவடி, பருத்திபட்டில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளிகளில் 142 மாணவர்களால் எழுதப்பட்ட கைப்புத்தகங்கள் வெளியீட்டு விழா நடந்தது. விழாவுக்கு வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி குழும தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன், துணை தாளாளர் ஸ்ரீராம் வேல்மோகன் ஆகியோர் தலைமை தாங்கி, 142 மாணவர்களின் கைப்புத்தகங்களை வெளியிட்டனர். இதில், பள்ளி குழும தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் பேசுகையில், 142 மாணவர்களின் கைப்புத்தகங்களில், அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் தனித்துவமான சிந்தனைகளை பாராட்டினார். மேலும், அவர் கூறுகையில், குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் ஊக்கம் மற்றும் ஆதரவு மிக முக்கிய பங்காற்றுகிறது.
மேலும், வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் அதிகளவு நூல்களை படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டு, உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும். இவர்களின் கைப்புத்தகங்கள் ஒரு நாள் சேத்தன் பகத் போன்ற பெரிய எழுத்தாளர்களின் படைப்புகளை போல் தேசிய மற்றும் சர்வதேச அளவுக்கு உயரவேண்டும்’ என்றார். விழாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் சேத்தன் பகத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கைப்புத்தகங்களை வெளியிட்டு வாழ்த்தி பேசினார். அவர் பேசுகையில், ஒவ்வொரு மாணவரிடமும் தனித்துவமான படைப்பாற்றல் உள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் கனவு காணவும் எழுதவும் வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.