தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யாருக்கு எவ்வளவு; எச்-1பி விசா கட்டணம்..? அமெரிக்கா புது அறிவிப்பு

நியூயார்க்: எச்-1பி புதிய விசா கட்டணமாக 1 லட்சம் டாலர் (ரூ.88 லட்சம்) என அமெரிக்க அரசு கடந்த மாதம் அறிவித்தது. இந்த விசாவில் செல்பவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதால் இது இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

இந்த நிலையில், இந்த பணியாளர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் மாணவர் விசாவில் இருக்கும் நபர்கள், எச்-1பி விசாவிற்கு அப்கிரேட் ஆனாலும், அவர்களும் 1 லட்சம் டாலர் கட்ட வேண்டியதில்லை. ஆனால், இந்த இரண்டு நடைமுறைகளுக்கு இடையிலும் அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி இருக்கக்கூடாது. அமெரிக்காவில் வசிக்கும் நபர்கள் எச்-1 பி விசாவிற்கு புதுப்பிக்க மற்றும் நீட்டிக்கவும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும், ஒரு நபர் நிலை மாற்றம் அல்லது தங்கும் கால நீட்டிப்புக்கு தகுதியற்றவர் எனக் கண்டறியப்பட்டால், புதிய கட்டணம் பொருந்தும்.

செப்டம்பர் 21ம் தேதி முன்பு வரை எச்-1 பி விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்டண உயர்வு பொருந்தாது என்றும் புதிய கட்டணம் அறிவிக்கப்பட்ட பின் விண்ணப்பித்தவர்களுக்கு பொருந்தும். புதிதாக எச்-1பி விசா பெற்று அமெரிக்கா வருபவர்களும், எச்-1பி விசா காலக்கெடு முடிந்து மீண்டும் விண்ணப்பிப்பவர்களும் 1 லட்சம் டாலர் கட்ட வேண்டும். இப்போது செல்லுபடி ஆகும் எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியே செல்வதற்கும், மீண்டும் அமெரிக்கா திரும்புவதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement