துப்பாக்கி வைத்திருக்கும் ஒன்றிய அமைச்சர்கள்!!
டெல்லி :ஒன்றிய அமைச்சர்களின் சொத்து விவரங்கள், பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சிவராஜ் சிங் சவுகான், ஷெகாவத் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர், குழந்தைகள் நல அமைச்சர் அன்னபூர்ணா தேவி, துணை அமைச்சர் சாவித்ரி தாக்கூரிடம் துப்பாக்கி உள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டுமே ஒரு கைத்துப்பாக்கி, 2 பைப் துப்பாக்கிகள் வைத்துள்ளார். சமூக நலத்துறை அமைச்சர் வீரேந்திர குமாரும் துப்பாக்கி வைத்துள்ளதாக சொத்து விவரத்தில் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement