தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துப்பாக்கியுடன் சுற்றும் சம்பவ செந்திலை பிடிக்க 5 தனிப்படை

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துப்பாக்கியுடன் சுற்றும் பிரபல ரவுடி சம்பவ செந்திலை பிடிக்க ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெளி மாநிலம் சென்று தீவிரமாக தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பவ செந்திலுக்கு தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்தான், வெடிகுண்டுகளை தயாரித்து கொடுத்துள்ளார். தூத்துக்குடியில் இருந்த ஆயுதங்களையும் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் போலீசார் தேடிவந்த நிலையில், சம்பவ செந்தில் தலைமறைவாகிவிட்டார்.
Advertisement

இதையடுத்து சம்பவ செந்திலை பிடிக்க 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். வெளிநாட்டில் வாங்கியுள்ள நவீனரக துப்பாக்கி எப்போதும் சம்பவ செந்திலின் கையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் போலீசார் தகுந்த பாதுகாப்புடன் அவரை கைது செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். சம்பவ செந்தில் படம் இதுவரை போலீசில் சிக்கவில்லை. பல கொலை, கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டிருந்தாலும் அவர் கைது செய்யப்படவில்லை. பல்வேறு காரணங்களால் போலீசார் கைது செய்யும் பணியை செய்யவில்லை.

அவரது படம் இல்லாததால், எப்படி இருப்பார் என்று தெரியாததால், போலீசாரும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்ைல. சம்பவ செந்திலும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது இல்லை. ஆனால் கைது செய்யப்பட்ட தமாகா பிரமுகர் ஹரிதரன், சம்பவ செந்திலைப் பார்த்துள்ளதால், அவர் கொடுத்த அடையாளம் மூலம் சம்பவ செந்திலை போலீசார் கம்ப்யூட்டர் மூலம் வரைந்துள்ளனர். அந்தப் படத்தை வைத்து சம்பவ செந்திலை கைது செய்யும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பவ செந்தில் கைது செய்யப்படும் நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News