குஜராத் பள்ளியில் பயங்கரம் 8ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய சக மாணவன்
பாலசினோர்: குஜராத் மாநிலம், மஹிசாகர் மாவட்டம் பாலசினோர் நகரில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவன் பள்ளி நேரம் முடிந்ததும் தனது வகுப்பு சக மாணவனை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அந்த மாணவன் பலத்த காயமடைந்தார். மஹிசாகர் எஸ்பி ஜெய்தீப்சிங் ஜடேஜா,‘‘ அந்த மாணவனின் தந்தை அளித்த புகாரை தொடர்ந்து இளம் குற்றவாளி மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளோம்.பாதிக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல் நிலை சீராக உள்ளது’’ என்றார்.
Advertisement
Advertisement