குஜராத்தில் 2 ஆண்டில் 307 சிங்கங்கள் பலி
காந்திநகர்: குஜராத் சட்டபேரவையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ உமேஷ் மக்வானா எழுப்பிய கேள்விக்கு வனத்துறை அமைச்சர் முலுபாய் பேரா அளித்த பதிலில்,‘‘ கடந்த 2 ஆண்டுகளில் 307 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன.கடந்த 2023 ஆகஸ்ட் முதல் 2024 ஜூலை வரை 141 சிங்கங்கள் இறந்துள்ளன. 2024 ஆகஸ்ட் முதல்2025 ஜூலை வரை 166 சிங்கங்கள் இறந்துள்ளன.
Advertisement
இயற்கைக்கு மாறான காரணங்களால் 41 சிங்கங்களும், நீரில் விழுந்ததில் 29 சிங்கங்களும் இறந்துள்ளன. இயற்கை பேரிடர்,சாலை விபத்து, ரயில் மோதி, மின்சாரம் தாக்கிய சம்பவங்களில் 12 விலங்குகள் உயிரிழந்துள்ளன. இந்த விலங்குகள் இயற்கைக்கு மாறான முறையில் பலியாவதை தடுக்க அரசு ரூ.37 கோடி செலவு செய்துள்ளது’’ என்றார்.
Advertisement