குஜராத்தில் 2 முறை நிலநடுக்கம்
காந்திநகர்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நேற்று இரவு 10.12 மணியளவில், 2001 நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பச்சாவ் நகருக்கு அருகே 3.4 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவானது. மக்கள் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், சரியாக 7 நிமிடங்கள் கழித்து, இரவு 10.19 மணியளவில் ராப்பர் நகருக்கு அருகே 2.7 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.
Advertisement
இந்த அடுத்தடுத்த நில அதிர்வுகளால் மக்கள் பீதியடைந்தனர். இருப்பினும், இந்த இரண்டு நிலநடுக்கங்களாலும் எந்தவிதமான உயிர்ச் சேதமோ, காயங்களோ அல்லது குறிப்பிடத்தக்க பொருட்சேதமோ ஏற்படவில்லை என மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Advertisement