தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு..!!

குஜராத்: குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பீதி ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது வட மாநிலங்களில் 'சண்டிபுரா வைரஸ்' தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 9 மாதங்கள் முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை மட்டும் குறிவைத்து தாக்கும் சண்டிபுரா வைரஸால் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
Advertisement

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் 8-10 மணி நேரத்தில் உயிரிழந்துவிடுவார்கள் என்பதால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மருத்துவமனை நோக்கி படையெடுத்திருக்கின்றனர்.இந்த வைரஸ் கொசு, மணல் ஈ மற்றும் உண்ணி உள்ளிட்டவற்றால் பரவுகிறது. சாதாரண காய்ச்சல் போல இருப்பதால் மக்களால் இதை அடையாளம் காண முடிவதில்லை. இந்நிலையில், குஜராத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஒரு குழந்தை கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. குழந்தையின் ரத்த மாதிரியை மருத்துவர்கள் புனே தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர். ஆய்வின் முடிவில், குழந்தை சண்டிபுரா வைரஸ் தொற்றால்தான் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதே அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த ராஜ்கோட்டில் 3, அகமதாபாத்தில் 2, பஞ்ச்மஹாலில் ஒரு குழந்தை என 6 குழந்தைகள் சண்டிபுரா வைரஸால் உயிரிழந்துள்ளது. சண்டிபுரா வைரஸ் தொற்றால் 15 குழந்தைகள் உள்பட 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement