குஜராத் மலை கிராமத்தில் தூளி கட்டி கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு..!!
குஜராத்: குஜராத் மலை கிராமத்தில் தூளி கட்டி மருத்துவமனைக்கு 5 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். குஜராத் மாநிலம் சோட்டே உதேபூர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அங்கு துர்கேடா மலைக்கிராமத்திலுள்ள பாலியா கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நேற்று மாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், வாகனங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதனால், வேறு வழியின்றி அவரின் குடும்பத்தினர், மூங்கில் கட்டையில் தூளி கட்டி கர்ப்பிணிப் பெண்ணை 5 கி.மீ. தூரத்துக்கு சுமந்து சென்றுள்ளனர்.
பின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இது போன்ற உயிரிழப்புகள் அதிகம் நடைபெறுவதாகவும்
குஜராத்தில் பல மலை கிராமங்களில் சாலை வசதி உள்பட எந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளாகியும் குஜராத்தில் பெரும்பாலான மலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. குஜராத்தின் ஊட்டி உதெப்பூருக்கு சாலை அமைக்க ஐகோர்ட் உத்தரவிட்டும் பாஜக அரசு செயல்படுத்தவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. சாலை இல்லாததால் மருத்துவமனைக்கு 5 கி.மீ. தூரம் தூளியில் தூக்கிச் செல்லும் அவலம் தொடர்ந்து வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.