கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் அமைச்சர் சி.வி.கணேசன்
சென்னை: தமிழ்நாட்டில் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இத்தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான தொழிற் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து அகில இந்திய அளவில் ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 27,480 அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவிகள் மற்றும் 19,280 தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவிகள் என மொத்தம் 46,760 பேர் பங்கேற்றனர்.
அதில் 26,447 (96.24%) அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவிகளும், 16,621 (86.21%) தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவிகள் என மொத்தம் 43,068 (92.10%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 96% மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தற்போது அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்களிலும் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கிண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கி பேசியதாவது:
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டதால் இந்த ஆண்டில் சாதனை படைக்கும் விதமாக 40 மாணவ மாணவிகள் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள் ளார்.