தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெருக்கள், சாலை, நீர்நிலை, கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறை: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: குடியிருப்பு தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குதல் மற்றும் மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு அரசு சாதி, மதம், பாலினம், செல்வம், அதிகாரம் போன்ற எந்தவொரு காரணத்தாலும் வேறுபாடு இல்லாத, சம வாய்ப்புகள் கொண்ட ஒரு நியாயமான மற்றும் முன்னேற்றமிக்க சமத்துவ சமூக அமைப்பை நோக்கி பல்வேறு திட்டங்கள், பணிகள், கொள்கை முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அரசு, அனைத்து தரப்பு மக்களும் மதிப்போடும், சமமாகவும் நடத்தப்படும்போது மட்டுமே உண்மையான சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற அடிப்படையில் மேற்கொண்டு வரும் எண்ணற்ற முன்னோடி முயற்சிகளின் ஒரு பகுதியாக முதல்வர் சட்டப்பேரவையில் 29.4.2025 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

Advertisement

அதன்படி, ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறியிருப்பதால் காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது பழக்கத்தில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அந்த அறிவிப்புக்கு ஏற்ப, குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது உட்கட்டமைப்புகளில் சாதி பெயர்களை நீக்குதல் அல்லது மறுபெயரிடுவது தொடர்பாக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது.

அது வருமாறு: உள்ளாட்சி அமைப்புகளின் குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் போன்ற சொத்துகள் மற்றும் நீர்நிலைகள் போன்ற பொது உட்கட்டமைப்புகளின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது பிரிவை சார்ந்த மக்களையும், அவர்களது உணர்வுகளையும் இழிவுபடுத்துவதாக அல்லது பாகுபாடு காட்டும் வகையில் அமைந்துள்ளதா என்பதையும் குறித்து மதிப்பிடும் வகையில் பெயர்கள் தொடர்பான விரிவான பகுப்பாய்வுகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற பெயர்கள் இருந்தால் உள்ளூர் மக்களின் கருத்துகளை கேட்டு, பெயர்கள் தொடர்வதில் எந்த பிரச்னையும் இல்லை என்றால் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால், அது ஒரு பிரிவினரை இழிவுபடுத்தும் வகையில் இருந்து, உள்ளூர் மக்களும் மாற்றத்தை கோரினால் அந்த பெயர்கள் பொதுவான பெயர்களாக மாற்றப்பட வேண்டும்.

சில பெயர்கள் அவசியம் மாற்றப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம், பறையர் தெரு, சக்கிலியர் சாலை போன்றவை தவிர்க்கப்பட வேண்டிய பெயர்கள். கள நிலைமை மற்றும் களத்தில் உள்ள உண்மைத்தன்மையின் அடிப்படையில் இந்த பணி மிகவும் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டும். பெயர் மாற்றம் குறித்து மாவட்ட ஆட்சி தலைவரால் மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும். இதன் மீது ஆட்சேபனை இருந்தால் அவற்றை 21 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அளிக்க காலஅவகாசம் வழங்க வேண்டும். பின்னர் அது முறையாக பரிசீலித்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதை தொடர்ந்து அரசு இறுதி முடிவு எடுக்கும். இந்த நடைமுறைகள் அனைத்தும் 19.11.2025ம் தேதிக்கு முன்னர் முடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

* புதிய பெயர் பட்டியல் வெளியீடு

குளம் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கிவிட்டு ரோஜா, மல்லி, செம்பருத்தி, சூரியகாந்தி, சாமந்தி, தாழம்பூ, காந்தள், கனகாம்பரம், கொன்றை, மகிழம்பூ, முல்லை, செண்பகம், குவளை, குறிஞ்சி, செவ்வந்தி என்று பெயர் சூட்டலாம். தெருக்கள் மற்றும் சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கிவிட்டு திருவள்ளுவர், அவ்வையார், கபிலர், சீத்தலைச் சாத்தனார், நக்கீரர், பிசிராந்தையார், கம்பர், அகத்தியர், வீரமாமுனிவர், பாரதியார், பாரதிதாசன், மகாத்மா காந்தி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராசர், கலைஞர் என்று பெயர் சூட்டலாம் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement