கூடலூர் அருகே காட்டு யானைகள் குட்டியுடன் சாலையில் உலா
கூடலூர்: கூடலூரை அடுத்த மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் குட்டியுடன் சாலையில் உலா வந்த காட்டு யானைகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்தது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளிவட்ட வனப்பகுதிகள் மழை காரணமாக பசுமை திரும்பி உள்ளது. எனினும் அடர் வனப் பகுதிகளில் லண்டனா மற்றும் பார்த்தீனியம் உள்ளிட்ட பல்வேறு களைத்தாவரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் புல்வெளிகள் குறைந்துள்ளது. இதனால் யானைகள், மான்கள், காட்டு எருமை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோர புல்வெளிகளில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன.
இதே போல் நேற்று மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் குட்டியுடன் 2 யானைகள் சாலையோர புல்வெளிகளில் மேய்ச்சலில் ஈடுபட்டன. மேலும் அவை சாலையில் நடனமாடின. சாலையில் நின்ற தாயிடம் குட்டி யானை பால் குடித்தது. தாய் யானையும் குட்டியை பத்திரமாக சாலையோரம் அழைத்துச் சென்றது. இந்தக் காட்சி அந்த வழியாக வாகனங்களில் வந்து சுற்றுலா பயணிகளின் தங்களது செபோனில் புகைப்படம், வீடியோ எடுத்து மகிழந்தனர்.