கூடலூரில் தண்ணீர் தேடி கிராமத்துக்குள் வந்த யானை குட்டி மயங்கி விழுந்தது!!
02:04 PM Apr 05, 2024 IST
Share
கூடலூர்: உணவு, தண்ணீர் தேடி கிராமத்துக்குள் வந்த யானை -குட்டி மயங்கி விழுந்தது. முதுமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. வறட்சி காரணமாக உணவு தண்ணீர் தேடி கிராமத்திற்குள் வந்த ஆண் குட்டி யானை மசினகுடி பள்ளி அருகே மயங்கி விழுந்தது. தற்போது யானைக்கு நீர்ச்சத்து நிறைந்த உணவுகள், மருந்துகளை கால்நடை மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர்.