கூடலூர் நகராட்சி, பன்னீர்மடை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பெ.நா.பாளையம் : கோவை துடியலூர் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் 21 மற்றும் 22வது வார்டு பொதுமக்களுக்கான “உங்களுடன் ஸ்டாலின்’’ திட்ட சிறப்பு முகாம், கே.ஆர்.நகர் பகுதியில் நடைபெற்றது. கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமை தாங்கினார். வடக்கு வட்டாட்சியர்கள் விஜயரங்க பாண்டியன், முருகராஜ், ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
முகாமில், 13 அரசுதுறை அதிகாரிகள் பொதுமக்களின் மனுக்களை பரிசளித்து மேல் நடவடிக்கைக்காக மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தனர். ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், ஆதார் திருத்தம், வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றம் மற்றும் நகராட்சி சம்பந்தப்பட்ட வேலைகளை முகாம் நடந்த நேற்றே முடித்து பொதுமக்களிடம் கொடுக்கப்பட்டது.
குருடம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி, கவுன்சிலர்கள் ரேகா, ஜனார்த்தனன், செந்தில்குமார், பாலசுப்பிரமணியம், ரேவதி, காரமடை அரங்கநாதர் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் குணசேகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் ராஜேந்திரன், ரவிகுமார், உதயகுமார், தீபக், விஷ்ணுபிரியா, காங்கிரஸ் கட்சி சுடர்விழி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பன்னீர்மடை ஊராட்சி: பன்னீர்மடை ஊராட்சி மன்றம் சார்பில், நடைபெற்ற முகாமினை நுகர்வோர் வாணிபக் கழக வட்டாட்சியர் பழனிக்குமார் தொடங்கி வைத்தார். இதில், மகளிர் உரிமைத் தொகை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, எரிசக்தி துறை, ஆதார் மற்றும் டிஜிட்டல் சேவை, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனம் வீட்டுவசதி துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவு துறை, சமூக நலத்துறை, வேளாண்மை உழவர் பாதுகாப்பு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை உட்பட 13 துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றிய செயலாளர் தாமோதரன், மூர்த்தி, ஆனந்தன், சிவக்குமார், கதிர்வேல், சாந்தி, சம்பத்குமார், சாய்தேவன், ரமேஷ், அருள்ராஜ், ஆறுச்சாமி, முருகன், தேவதாஸ், அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.