தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்கள் விரும்பிய பொருட்களை குறைந்த விலையில் பெறலாம்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: புதிய வரி குறைப்பு அறிவிப்புகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 5 மணியளவில் நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது;

Advertisement

"நவராத்திரியின் முதல் நாளில் (செப்.22) ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலாகிறது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள், பெண்கள், வணிகர்கள் என அனைவரும் பயன் பெறுவர். மக்கள் விரும்பிய பொருட்களை குறைந்த விலையில் பெறலாம், சேமிப்பு அதிகரிக்கும்.

ஜிஎஸ்டி வரிக் குறைப்பானது நடுத்தரக் குடும்பங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏழைகள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பொருள்களை குறைந்த விலையிலேயே வாங்கலாம்.

வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் தற்போது 2வது பரிசு கிடைத்துள்ளது. இது நடுத்தர மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும். 12% GSTல் இருந்த 99% பொருட்கள், 5% GSTக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளை முதல் குறையும்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மக்களுக்குத் தேவையான பொருள்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.உள்நாட்டுப் பொருள்கள் சிறந்த தரத்துடன் தயாரிக்கப்பட வேண்டும். அவை உலக தரத்துடன் போட்டிபோடும் வகையில் இருப்பது அவசியம்.

உள்நாட்டுக் தயாரிப்புகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும். சுதந்திரத்திற்குப் பிறகும் சுதேசி பயன்பாடுதான் பலனளித்தது. நாம் அனைவரும் இணைந்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்" என உரையாற்றினார்.

Advertisement

Related News