தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜி.எஸ்.டி குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை 5 ஆண்டுக்கு ஈடு செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: ஒன்றிய நிதி அமைச்சகத்தின் தரப்பில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதுபோன்ற சூழலில் ஜி.எஸ்.டி குறைப்பு தொடர்பாக எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள கர்நாடகா பவனில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, இமாச்சல், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல் ஆகிய மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Advertisement

இதில் தமிழ்நாடு சார்பாக மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ”ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கையை ஆதரிக்கிறோம். அதே வேளையில் இந்த நடைமுறையால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் .

மேலும் ஒன்றிய அரசின் இந்த சீர்திருத்த நன்மைகள் நுகர்வோரைச் சென்றடைய வேண்டும். சாதாரண மக்களுக்கு உதவ வேண்டும். அதேநேரத்தில் மாநிலங்களின் வருவாய் நலன்கள் பாதிக்கப்படக் கூடாது. தமிழ்நாட்டின் வரி வருவாயில் ஜிஎஸ்டி குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.அதில் ஏதேனும் பற்றாக்குறை ஏற்பட்டால் நடந்து கொண்டிருக்கும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்களை நேரடியாகப் பாதிக்கும். எனவே மாநில நிதி பாதுகாக்கப்படுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.

கர்நாடக நிதியமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா கூறும்போது,” ஒவ்வொரு மாநிலமும் அதன் தற்போதைய ஜிஎஸ்டி வரி வருவாயில் 15-20 சதவீதத்தை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 சதவீத ஜிஎஸ்டி வருவாய் இழப்பு நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளின் நிதி அமைப்பை கடுமையாக சீர்குலைக்கும். வருவாய் நிலையாகும் வரை மாநிலங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

Advertisement