தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சேமிப்பை அதிகரிக்கும் அனைத்து மக்களுக்கும் நேரடி பயனளிக்கும்: பிரதமர் மோடி கடிதம்

புதுடெல்லி: ‘ஜிஎஸ்டி சீர்த்திருத்தங்கள் சேமிப்பை அதிகரிக்கும். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நேரடியாக பயனளிக்கும்’ என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி உள்ளார். ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்த்திருத்தங்கள் நேற்று அமலுக்கு வந்த நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு, பண்டிகை காலம் மகிழ்ச்சியடைய கூடுதல் காரணத்தைக் கொண்டுவருகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சேமிப்பை அதிகரிக்கும். விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நேரடியாக பயனளிக்கும். இது அதிக வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும். ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தின் முன்னேற்றத்தை துரிதப்படுத்தும்.

Advertisement

அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் முக்கிய அம்சம் 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என 2 அடுக்குகள் இருப்பதே. உணவு, மருந்துகள், சோப்பு, பேஸ்ட், காப்பீடு மற்றும் பல அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் இப்போது வரி இல்லாததாகவோ அல்லது மிகக் குறைந்த 5% வரி அடுக்கிலோ கொண்டு வரப்பட்டுள்ளன. முன்பு 12% வரி விதிக்கப்பட்ட பொருட்கள் கிட்டத்தட்ட முழுமையாக 5% வரி அடுக்கிற்குள் வந்துவிட்டன. இதுதொடர்பாக, பல்வேறு கடைக்காரர்கள், வணிகர்கள் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கு முந்தைய மற்றும் பிந்தைய வரிகளைக் குறிக்கும் பலகைகளை வைப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில், 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டு, புதிய நடுத்தர வர்க்கமாக உருவாகி உள்ளனர். மிகப்பெரிய வருமான வரி குறைப்புகளுடன் நடுத்தர வர்க்கத்தினரின் கைகளை வலுப்படுத்தி உள்ளோம். ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை பூஜ்ஜிய வருமான வரியை உறுதி செய்துள்ளோம். இந்த வருமான வரி குறைப்புடன் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களையும் இணைத்தால், அவை மக்களுக்கு கிட்டத்தட்ட ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பை சேர்க்கின்றன. உங்கள் வீட்டுச் செலவுகள் குறையும். வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல், உபகரணங்கள் வாங்குதல், வெளியே சாப்பிடுதல் அல்லது குடும்ப விடுமுறையைத் திட்டமிடுதல் போன்ற விருப்பங்களை நிறைவேற்றுவது இனி எளிதாக இருக்கும். 2017ல் தொடங்கிய நாட்டின் ஜிஎஸ்டி பயணம், மக்களையும் வணிகங்களையும் பல வரிகளின் வலையிலிருந்து விடுவிப்பதில் திருப்புமுனையாக அமைந்தது.

ஜிஎஸ்டி, நாட்டை பொருளாதார ரீதியாக ஒன்றிணைத்தது. ஒரே நாடு, ஒரே வரியான ஜிஎஸ்டி சீரான தன்மை மற்றும் நிவாரணத்தைக் கொண்டு வந்தது. ஒன்றிய மற்றும் மாநிலங்களின் தீவிர பங்களிப்புடன் ஜிஎஸ்டி கவுன்சில் மக்களுக்கு பயனுள்ள பல முடிவுகளை எடுத்தது. இப்போது, இந்த புதிய சீர்திருத்தங்கள் நம்மை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றன. ஜிஎஸ்டி அமைப்பை எளிமைப்படுத்துகின்றன, விகிதங்களைக் குறைக்கின்றன. மக்களின் கைகளில் அதிக சேமிப்பை வழங்குகின்றன.

நமது சிறு தொழில்கள், கடைக்காரர்கள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் மற்றும் எம்எஸ்எம்இக்கள் வணிகம் செய்வதை எளிதாக்குதல், விதிமுறைகளுக்கு இணங்குவதை எளிதாக்குதல் ஆகிய பலன்களை காண்பார்கள். 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்பது மக்களின் கூட்டு இலக்கு. அதை அடைய, தன்னம்பிக்கை பாதையில் நடப்பது அவசியம். இந்த சீர்திருத்தங்கள் உள்ளூர் உற்பத்தித் தளத்தை வலுப்படுத்தி, சுயசார்பு இந்தியாவை நோக்கி வழி வகுக்கும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

* சுதேசி பொருட்களை வாங்குங்கள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வரும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘இந்த பண்டிகை காலத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஆதரிக்கவும் நாம் உறுதியெடுப்போம். ஒரு இந்தியரின் வியர்வை மற்றும் உழைப்பை உற்பத்தியில் ஈடுபடுத்தும் சுதேசி தயாரிப்புகளை வாங்குங்கள். நமது சொந்த கைவினைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்களால் தயாரிக்கப்பட்ட ஒரு பொருளை நீங்கள் வாங்கும் பல குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த உதவுகிறீர்கள், நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறீர்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை கடைக்காரர்கள் விற்பனை செய்ய வேண்டும். நாம் வாங்குவது சுதேசி என்றும் , விற்பனை செய்வது சுதேசி என்று பெருமையுடன் சொல்வோம்’’ என்றார்.

* ஒவ்வொரு வீட்டிலும் பிரகாசமான புன்னகை

ஜிஎஸ்டி சீர்திருத்த அமலாக்கம் குறித்து தேசிய நாளிதழ்களின் செய்திகளை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்துள்ள பிரதமர் மோடி, ‘‘சந்தைகள் முதல் வீடுகள் வரை ஜிஎஸ்டி சீர்திருத்தம் பண்டிகைக் கால கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் பிரகாசமான புன்னகையை உறுதி செய்கிறது’’ என கூறி உள்ளார்.

Advertisement