ரூ.5.29 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு நிறுவன உரிமையாளர் கைது
லூதியானா: லூதியானாவில் ரூ.5.29 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பதேகர் சாஹிப் மாவட்டம் மண்டி கோபிந்த்கரில் உள்ள இரும்பு மற்றும் எக்கு நிறுவனம் வருவாயை மோசடியாக காட்டுவதற்கான போலி நிறுவனம் ஒன்றை உருவாக்கி உள்ளது.
Advertisement
இந்த நிறுவனம் ரூ.29.43 கோடி மதிப்பில் போலி பில்களை தயாரித்து ரூ.5.29 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என்பது கண்டுபிடிக்கப்பட்டதால், நிறுவன உரிமையாளரை சிஜிஎஸ்டி அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
Advertisement