கோடிகளில் வருவாய் தந்த ஜிஎஸ்டி.. கடந்த மூன்று நிதியாண்டுகளில் தொடர்ந்து டாப் 5ல் இருக்கும் மாநிலங்களின் பட்டியல்..!!
டெல்லி: இந்தியாவின் ஜிஎஸ்டி வருவாயில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, ஹரியானா ஆகிய 5 மாநிலங்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. கடந்த மூன்று நிதியாண்டுகளில் இந்த டாப் 5 மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் விவரங்கள் பின்வருமாறு;
2022 - 23ம் நிதியாண்டில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.18,07,680 கோடியாக இருந்தது. இதில் மகாராஷ்டிரா - ரூ.2,70,346 கோடியுடன் முதலிடம் பிடித்தது. கர்நாடகா - ரூ.1,22,822 கோடியுடனும், குஜராத் - ரூ.1,14,221 கோடியுடனும் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. தமிழ்நாடு - ரூ.1,04,377 கோடியை ஈட்டி நான்காம் இடத்தை பிடித்தது. ஹரியானா - ரூ.86,668 கோடி ஈட்டியது.
2023 - 24ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.20,18,249 கோடியாக உயர்ந்தது. மகாராஷ்டிரா - ரூ.3,20,117 கோடியாக அதிகரித்தது. கர்நாடகா - ரூ.1,45,266 கோடியும், குஜராத் - ரூ.1,25,168 கோடியும் ஈட்டின. தமிழ்நாடின் வருவாய் - ரூ.1,21,329 கோடியாக உள்ளது. ஹரியானா - ரூ.1,02,914 கோடியாக உயர்ந்தது.
2024 - 25ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.22,08,861 கோடியை எட்டியுள்ளது. மகாராஷ்டிரா - ரூ.3,59,855 கோடியுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா - ரூ.1,59,564 கோடியும், குஜராத் - ரூ.1,36,748 கோடியும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. தமிழ்நாடின் ஜிஎஸ்டி வருவாய் - ரூ.1,31,115 கோடியாக உயர்ந்துள்ளது. ஹரியானா - ரூ.1,19,362 கோடியுடன் தொடர்ந்து 5வது இடத்தை பிடித்துள்ளது.