தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்தது வீட்டு உபயோக பொருட்கள் விலை குறையுமா?கண்காணிப்பதற்கு ஒன்றிய அரசிடம் உரிய திட்டம் இல்லாததால் குழப்பம்

 

Advertisement

புதுடெல்லி: புதிய ஜிஎஸ்டி சீரமைப்பு நேற்று அமலுக்கு வந்துள்ளது. இதற்கேற்ப பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களின் வரியை குறைப்பதாக அறிவித்துள்ளன. புதிய விலை பட்டியலையும் வெளியிட்டன. அதேநேரத்தில், இதுபோல், ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட அனைத்து நுகர்வோர் பொருட்களுக்கும் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும், இதனை ஒன்றிய அரசு கண்காணிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேநேரத்தில், ஜிஎஸ்டி குறைப்பு பலன் வாடிக்கையாளர்களை சென்று சேர்வதை கண்காணிக்க ஒன்றிய அரசிடம் உரிய திட்டம் இல்லாதது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

முதன் முதலாக இந்தியாவில் 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு அடுக்கு வரி விதிப்பு முறை தான் நடைமுறையில் இருந்தது. அப்போது, மக்கள் அத்தியாவசியம் பயன்படுத்தும் சில பொருட்கள் அதிக வரிப்பிரிவில் இருந்தன. இதுபோல், ஒரு சில குடிசைத் தொழில்கள் கூட பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மாநில அரசுகள் சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் தொடர் பரிந்துரைகளை அடுத்து சில பொருட்கள் மீதான வரி விலக்கப்பட்டது அல்லது குறைக்கப்பட்டது. அதேநேரத்தில் இந்த 4 அடுக்கு வரி விதிப்பு நடைமுறை பொதுமக்கள் மற்றும் சிறு, குறு வணிகர்களுக்கு பெரும் சுமையாக அமைந்ததுடன், வரி இணக்க நடைமுறைகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தியது.

எனவே, இதனை எளிமைப்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், நாடு முழுவதும் 5% மற்றும் 18% என 2 அடுக்கு வரி விதிப்பு முறை கொண்டு வரப்பட்டுள்ளது நேற்று இது அமலுக்கு வந்தது. முன்னதாக, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் ஆற்றிய உரையில் இதனை ‘ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா’ என்று குறிப்பிட்டார். தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக மக்களின் வரிச்சுமையைக் குறைத்து, பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த மாற்றத்தின்படி, முன்பு 12% வரி விதிக்கப்பட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் தற்போது 5% வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக பொட்டலங்களில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், காபி, நெய், வெண்ணெய், பனீர், ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்களும், சோப்பு, ஷாம்பு, பற்பசை, மிதிவண்டிகள், ஜவுளி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களும் அடங்கும். மேலும், பெரும்பாலான மருந்துகளுக்கு வரி விலக்கு அல்லது குறைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.7,500 வரை கட்டணமுள்ள தங்கும் விடுதி அறைகளுக்கும் 5% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படும். அதேபோல, 28% வரி வரம்பில் இருந்த பல பொருட்கள் தற்போது 18% வரம்புக்குள் வந்துள்ளன. இதனால் 32 அங்குலத்திற்கு மேற்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிரூட்டிகள் (ஏசி), பாத்திரம் கழுவும் இயந்திரங்கள், சிறிய ரக கார்கள், 350சிசி-க்கு குறைவான மோட்டார் சைக்கிள்கள், சிமெண்ட் மற்றும் பிற கட்டுமானப் பொருட்களின் விலை குறைந்துள்ளது.

இவ்வாறு, பொருட்களின் விலை குறைவதால், நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்து, இந்தப் பண்டிகைக் காலத்தில் சில்லறை வர்த்தகம், இணையவழி வர்த்தகம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் துறையில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஜிஎஸ்டி அமைப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 0.7 முதல் 0.8 சதவீதம் வரை அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

மேலும், எளிமையான வரி அமைப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வரி செலுத்தும் நடைமுறைகளை எளிதாக்கி, அவற்றின் இணக்கச் செலவுகளைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி குறைப்பு நேரடியாக வரும் தீபாவளி (அக். 20) பண்டிகைக் கால விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு ஆன்லைன் வர்த்தகத்தின் மொத்த வர்த்தகம் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கும். இதன் மூலம், விற்பனை மதிப்பு சுமார் ரூ.1.15 லட்சம் கோடியை எட்டும் என்றும், இது 2021ம் ஆண்டுக்குப் பிறகு மிக வலுவான பண்டிகைக் காலமாக அமையும் என்றும் பகுப்பாய்வு நிறுவனங்கள் கணிப்புகள் வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, பண்டிகை சீசனில் டிவி, பிரிட்ஜ், ஏசி மற்றும் டிஷ் வாஷர் போன்ற மின்னணு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை 50 முதல் 60 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் விலைகள் 8 முதல் 10 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அத்துறையில் கூடுதலாக 2 முதல் 3 சதவீத வளர்ச்சியை ஏற்படுத்தும். ஆடை, அழகு மற்றும் தனிநபர் பராமரிப்பு, வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்ற துறைகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி நீடிக்கும். மளிகைப் பொருட்களை வழங்கும் விரைவு வர்த்தகத் துறை ஏற்கனவே 150 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், பண்டிகைக் காலத்தில் அதன் செயல்திறன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரி குறைப்பின் தாக்கம் குறித்து பரோடா வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் ‘இந்த வரிக்குறைப்பால் நுகர்வோர் சந்தையில் சுமார் 0.7 முதல் 1 லட்சம் கோடி ரூபாய் வரை கூடுதலாக புழங்கும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 முதல் 0.3 சதவீதம் வரை வளர்ச்சியை ஏற்படுத்தும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் தேவை காரணமாக, இணையவழி வர்த்தகம் மற்றும் அதைச் சார்ந்த விநியோகத் துறைகளில் வேலைவாய்ப்புகள் பெருகும். இது மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரித்து, நேர்மறையான பொருளாதாரச் சுழற்சியை உருவாக்கும். ஒட்டுமொத்தமாக சந்தையில் நேர்மறையான சூழல் நிலவுவதால், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நுகர்வோருக்கும், வர்த்தகர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய அரசின் கணிப்புப்படி, மளிகை பொருட்கள், விவசாய கருவிகள், ஆடை, மருந்து, ஆட்டோமொபைல் உள்பட சுமார் 375 பொருட்கள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. டிராக்டர்கள் வாங்குவோருக்கு ரூ.40,000 சேமிப்பு கிடைக்கும். பைக் ஸ்கூட்டர் வாஙகுவோருக்கு ரூ.8,000, 32 அங்குலத்துக்கு மேல் உள்ள பெரிய டிவி வாங்குவோருக்கு ரூ.3,500, ஏசி வாங்குவோருக்கு ரூ.2,800 வரை பலன் விலை குறைப்பு பலன் கிடைக்கும் என்கிறது.

இதுபோல், கார் நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக விலை குறைப்பு பட்டியலை வெளியிட்டுள்ளன. பிஸ்கெட் தயாரிப்பு உள்பட சில நிறுவனங்கள் ஜிஎஸ்டிக்கு ஏற்ப வரி குறைத்தால் சில்லறை பிரச்னை ஏற்படும். எனவே, அதே விலைக்கு சற்று கூடுதலாக வழங்கலாம் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் ஜிஎஸ்டி வரிகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஒன்றிய அரசு முறையாக கண்காணிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பல நிறுவனங்கள் உற்பத்தி பொருட்களுக்கான விலையை குறைத்து அறிவித்திருந்தாலும், அனைத்து நுகர்வோர் பொருட்களுக்கும் விலை குறைக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனை கண்காணிப்பதற்கு ஒன்றிய அரசிடம் உரிய திட்டம் இல்லாததால், உண்மையிலேயே அனைத்து பலன்களும் தங்களுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது; குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் ஏற்கனவே தொழில்துறையினர் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், விலைகுறைப்பால் மூலதனப் பொருட்களின் கொள்முதல் விசயத்தில் அவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கான தீர்வு என்ன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுவது போன்று ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது வெறும் கண்துடைப்பா? என்ற விமர்சனங்களும் பல விவாதங்களை எழுப்பியுள்ளன. எனவே, விலை குறைப்பு பலன் நுகர்வோரை சென்றடைவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். முன்பு எந்த விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தது என்பதையும் கண்காணிக்க ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

* நோட்டு புத்தகம் விலை குறைய வாய்ப்பில்லை

நோட்டு புத்தக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், ‘‘பயிற்சி புத்தகங்கள், கிராப் புத்தகங்கள், நோட்டு புத்தகம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இவை மலிவு விலையில் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் இது சாத்தியமில்லை.

ஏனெனில், நோட்டு புத்தகம் தயாரிக்க பயன்படுத்தும் காகிதங்களுக்கு ஜிஎஸ்டி உள்ளது. ஆனால், நோட்டு புத்தக மூலப்பொருட்களுக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டதால் இன்புட் வரி கோர முடியாது. அதே நேரத்தில், உற்பத்தி செலவுகளும் அதிகரித்து விட்டதால், விலை குறைப்பது சாத்திமில்லை’’, என தெரிவித்துள்ளனர். கர்நாடகா பேப்பர் மற்றும் எழுதுபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் கூறுகையில், ‘‘இன்புட் வரி கோர முடியாததால் விலையை குறைக்க இயலாது. அதேநேரத்தில், இன்புட் வரி பெறுவதற்கு மாற்று வழிமுறையை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்,’’ என கோரியுள்ளது.

* ரூ.2,500 கோடி இழப்பு: கார் டீலர்களுக்கு புது சிக்கல்

ஜிஎஸ்டியால் கார்கள் விலை குறைக்கப்பட்டுள்ளன. எவ்வளவு விலை குறையும் என்ற விவரத்தை அந்தந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேநேரத்தில், கார் டீலர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, நவராத்திரி, தீபாவளி பண்டிகை சீசனில் கார்கள் அதிகம் விற்பனையாகும் என்பதால், டீலர்கள் ஏராளமான கார்களை வாங்கி வைத்துள்ளனர். இந்த வகையில் சுமார் 5,00,000 கார்கள் டீலர்களிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

இவற்றுக்கு, நிறுவனங்களிடம் இருந்து வாங்கும்போது இழப்பீட்டு செஸ் வரியாக ரூ.2,500 கோடியை டீலர்கள் செலுத்தி விட்டனர். இதனை வாடிக்கையாளர்கள் தலையிலும் சுமத்த முடியாது. எனவே, இதனை அடுத்த வரி நிலுவையில் கழித்துக் கொள்ள ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அல்லது, கார் நிறுவனங்களே இவற்றை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Advertisement