ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு வருவாய் இழப்பு எவ்வளவு?எஸ்பிஐ வங்கி அறிக்கை
கொல்கத்தா: ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் குறைந்தபட்சம் ரூ.3,700 கோடிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2017ல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஐந்து சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதமாக இருந்தன. சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ,நான்கு அடுக்கு கட்டமைப்பு இரண்டு அடுக்காக மாற்றப்பட்டுள்ளது. நிலையான விகிதம் 18 சதவீதம் மற்றும் ஐந்து சதவீதம், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 40 சதவீத தகுதியின்மை விகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி இது தொடர்பாக ஆராய்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் வங்கித் துறையில் பெரும்பாலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.ஜிஎஸ்டி விகிதங்களை சீரமைப்பதன் நிகர நிதி தாக்கம் ஆண்டுக்கு ரூ.48,000 கோடியாக இருக்கும் என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது. வளர்ச்சி மற்றும் நுகர்வு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச வருவாய் இழப்பு ரூ.3,700 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும் நிதிப் பற்றாக்குறையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.