56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது : ஏசி, பிரிட்ஜ் உள்பட 175 பொருட்களின் விலை குறைகிறதா?
டெல்லி : டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. 175 பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை குறைப்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. டிவி, ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஜவுளி, ரெடிமேட் ஆடைகள், காலணிகள், உரம், ஷாம்பூ, சோப்பு, பற்பசை, டயர், டிராக்டர், மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 5% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement