தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

என்னாலும் சாதிக்க முடியும்!

உங்களிடம் சாதனையாளனுக்குரிய பண்புகள் எதுவுமே இல்லையென்றாலும் தொடர்ந்து முன்னேறுங்கள். எதுவுமே இல்லாதவரிடம் கூட நம்பிக்கை இருக்கிறது என்கிறார் அறிஞர் தேல்ஸ். நம்பிக்கை என்பது உடனே தோன்றி மறையும் மின்னலாக இருக்கக் கூடாது. நம்மோடு கலந்து இருந்தால்தான் சாதனைகளை சாதகமாக்க முடியும். டேனியல் வெஸ்டர் என்ற அறிஞரிடம் இளைஞர் ஒருவர் கேட்டார். நான் வழக்கறிஞர் பட்டம்பெற்றிருக்கின்றேன். ஆயிரக்கணக்கானோர் பட்டம் பெற்றிருக்கும் இந்த துறையில் என்னால் சாதிக்க முடியுமா? என்று கேட்டார். அதற்கு அவர் சொன்னார். ஏன் முடியாது? நீ கீழே உள்ள ஆயிரக் கணக்கானவர்களைப் பார்க்காமல் விட்டுவிட வேண்டும். அதற்கு மேல் நான்கு பேர் இருப்பதையும் பார்க்கக்கூடாது. அதற்கு மேல் பத்து பேர் இருப்பதையும் பார்க்கக் கூடாது. அதற்கு மேல் ஒருவர் இருப்பதை பார். அதற்கும் அப்பாற்பட்ட ஒரு இடத்தை அடைய முயற்சி செய். சாதனை படைப்பாய் என்றார். சாதனையின் படிக்கட்டாக நம்பிக்கையையும், கைப்பிடியாக முயற்சியையும் பிடித்து ஏறினால் மட்டுமே சாதனை என்ற வீட்டுக்குள் நம்மால் நுழையமுடியும்.

சமுதாயத்தில் வாழும் மக்களில் நானும் ஒருவன் என்று சாதாரண மனிதன் என்ற நிலையில் வாழ்பவர்களுக்கு சாதனைகள் என்பது என்றும் எட்டாக்கனியாக போய்விடும். ஆனால் நானும் சாதிக்க வேண்டும். என்னையும் ஊரும், உலகமும் போற்ற வேண்டும். உலக சாதனையாளர்கள் வரிசையில் நானும் இடம்பெற வேண்டும் என்ற உற்சாகமும், உத்வேகமும் உள்ளவர்கள் வாழ்வில் சாதித்துவிடுகின்றார்கள்.இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக நம்மை அடிமைப்படுத்திக்கொண்டிருந்த ஆங்கிலேயர்களை காந்தியடிகள் விரட்டி அடித்தது மிகப்பெரிய சாதனை தானே! தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா கறுப்பர் இன மக்களுக்காகப் போராடி 27ஆண்டுகள் சிறைவாசம் செய்தாரே! தன் வாழ்வின் ஒரு பகுதி சிறைச்சாலையிலேயே கழித்தாரே! அதனால் தானே கறுப்பர் இன மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது.நெல்சன் மண்டேலாவின் சாதனை மகத்தானது தானே!

ஏன் அந்நியரிடம் கையேந்த வேண்டும்? உலக விஞ்ஞானிகளுக்கு இணையான அறிஞர்கள் நம் நாட்டிலும் உண்டு. நாமே நம்மை வலிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லி, அணு ஆயுத சோதனைகள் நடத்தி, உலக நாடுகளையெல்லாம் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்தார் அப்துல் கலாம்! இந்தியாவும் வல்லரசு தான் என்று எல்லா நாடுகளையும் ஒப்புக்கொள்ள வைத்தார். ‘கனவு காணுங்கள்’ பாரதத்தை உலகின் மிகப்பெரிய சக்தியாக மாற்றுவோம் என்று முழங்கினாரே! நமது இந்திய திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். உலகையே உலுக்கிய அவரது விஞ்ஞானசாதனைகள் மகத்தானவைதானே! இப்படி சாதித்தவர்களின் பெயர்களை சொல்லிக் கொண்டே போகலாம்.முடியாது என்று எதுவுமே கிடையாது. முயற்சியும், உழைப்பும், சாதிப்போம் என்ற நம்பிக்கையும்தான் வேண்டும்.அப்படிப்பட்டவர்கள் உலகில் எத்தனை பெரிய சாதனைகளையும் நிகழ்த்தி காட்ட முடியும். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் நேஹா பைத்வால். அவரது தந்தை ஷ்ரவன் குமாரின் அரசு வேலை காரணமாக, அவரது குடும்பம் நீண்ட காலத்திற்கு ஒரே நகரத்தில் தங்கியதில்லை. இதன் காரணமாக அவர் அடிக்கடி பள்ளிகளை மாற்ற வேண்டியிருந்தது. ஜெய்ப்பூரில் ஆரம்பப் படிப்பை முடித்த நேஹா, பின்னர் போபாலிலும், சத்தீஸ்கரிலும் அவரது கல்வியை முடித்தார்.அவருடைய வாழ்க்கையின் முதல் தோல்வி 5 ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்தபோது ஏற்பட்டு உள்ளது. ஆனால், அந்தத் தேர்வின் முடிவுகளால் அவர் சோர்வடையவில்லை.நேஹா அவர் குடும்பத்துடன் போபாலுக்கு ஷிப்ட் செய்தபோது, அங்கு புதிதாக சேர்ந்த பள்ளி ஆங்கிலவழி பள்ளி என்றும், அங்கு இந்தியில் பேசினால் அபராதம் விதிக்கப்படும், என்றும் கூறினார்.ஆனால், அவர் மொழியைக் கற்றுக்கொண்டார். படிப்பை முடித்தபிறகு ஒரு அரசு ஊழியரின் மகளாக, வருமானவரித்துறை அதிகாரியான அவரது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத முடிவு செய்தார். ஆனால், இங்கும், அவர் மீண்டும் மீண்டும் தோல்விகளைச் சந்தித்தார். ஆனால், அது அவருக்கு புதிதல்ல என்பதால், விடாது முயன்றார்.

ஒரு முறை அல்ல, மூன்று முறை தேர்வில் தோல்வியடைந்தார். முதல் இரண்டு முயற்சிகளிலும் முதல்நிலைத் தேர்விலே தோல்வி. மூன்றாவது முயற்சியில், அவர் முதன்மைத் தேர்வை எழுதினார், மீண்டும் தோல்வியடைந்தார். மூன்று பின்னடைவுகளுக்கு காரணம் என்ன என்று யோசித்தார்.அதற்கு ஸ்மார்ட் போனும், சமூக வலைத்தளங்களும் பெரும் தடையாக தனக்கு மாறிவருவதை உணர்ந்தார். பின், ஸ்மார்ட்போனை விட்டு விலகி செல்ல முடிவுசெய்தார். முழுமூச்சாக தேர்விற்கு தயாராகுவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இப்படியாக, அவர் 3 ஆண்டுகளுக்கு ஸ்மார்ட் போனை பயன்படுத்தவேயில்லை, மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிச் சென்றார். ஸ்மார்ட் போனுடன் மட்டுமின்றி, மூன்று ஆண்டுகள், அவரது நண்பர்களிடமிருந்தும்கூட விலகியே இருந்தார்.நாளொன்றுக்கு 17 முதல் 18 மணிநேரம்படித்தார். ஆனால் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்ற கடினமாக உழைத்தார்.

இறுதியாக, அவருடைய கடின உழைப்பு பயனளித்தது. 2021ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில், 960 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். அவரது நான்காவது முயற்சியில் தேர்ச்சி பெற்று 24 வயதில் நாட்டின் இளம் ஐஏஎஸ் அதிகாரியானார். ஆனால், ஸ்மார்ட்போனையும், நண்பர்கள் உடனான தொடர்பையும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகுபவர்கள் துறப்பது தியாகமல்ல. அவர்களுக்காக அவர்ளின் பெற்றோர் எடுக்கும் முயற்சிகளே தியாகம் என்கிறார் நேஹா. நேஹாஸ்மார்ட் போன் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிச் சென்றதைப்பற்றி பலரும் எதிர்மறைக்கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் உலகின் மிகவும் சவாலான தேர்வுகளில் ஒன்றான இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய அழுத்தத்தையும், போட்டியையும் நினைவில் கொள்ளுமாறு எதிர்மறைவிமர்சகர்களுக்கு பலரும் கருத்துகளை தெரிவித்தனர்.நேஹா தனது தொலைபேசியைப் பயன்படுத்தவில்லை, ஆனால் தினந்தோறும் செய்திகளை தெரிந்துகொள்ளவும், இந்தியாவில் என்ன நடக்கிறது, எப்படி செயல்படுகிறது என்பதை அறியவும் அவர் தினந்தோறும் செய்தித்தாளைப் படித்து நாட்டு நடப்புகளையும்,பொது அறிவையும் மேம்படுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாகுவது அத்தனை எளிதல்ல. அதற்கு விடாப்பிடியான வைராக்கியமும், கடின உழைப்பும் தேவை. இதை சரியாக கடைபிடித்த நேஹா முறையான பயிற்சிகளை மேற்கொண்டு ஸ்மார்ட் போன் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிச்சென்று தேர்வுக்காகத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு யுபிஎஸ்சி தேர்வில் சாதித்துள்ளார் என்பது ஒரு மகத்தான சாதனை. நேஹாவை போலவே நாமும் சாதிக்கப் பிறந்தவர்கள். என்னாலும் சாதிக்க முடியும் என்னிடம் ஏராளமான திறமைகள் கொட்டிக்கிடக்கின்றன, அவற்றில் எதையாவது ஒன்றினை கண்டு உணர்ந்து நான் நிச்சயமாக சாதித்து காட்டுவேன். வாழ்க்கையில் வெற்றி கொடி நாட்டுவேன் என்று உறுதியோடு செயல்பட்டால் சாதனைகள் அனைத்தும் நம் காலடியை தேடி ஓடிவரும் என்பதில் ஐயமில்லை.

Related News