தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

645 பதவிக்கு குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு; தமிழகம் முழுவதும் 4.18 லட்சம் பேர் பங்கேற்பு: வரும் டிசம்பர் மாதம் ரிசல்ட்

* காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்- டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு

Advertisement

சென்னை, செப்.29: குரூப் 2, குரூப் 2ஏ பதவியில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வை 4.18 லட்சம் பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும். காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)குரூப்-2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 15ம் தேதி வெளியிட்டது. குரூப் 2 பணியில் 50 இடங்கள், குரூப் 2ஏ பதவியில் 595 இடங்கள் நிரப்பப்படுகிறது. இத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இத்தேர்வு எழுத 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 பேர், பெண்கள் 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பேர், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் அடங்குவர். இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் 1905 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சென்னையை பொறுத்தவரை திருவல்லிக்கேணி என்.கே.டி. தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளி, எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலை பள்ளி, திருவல்லிக்கேணி மாநில கல்லூரி, பிராட்வே பாரதி பெண்கள் கல்லூரி என 188 தேர்வு கூடங்களில் இந்த தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும் 53606 பேர் தேர்வு எழுதினர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடந்தது.

எழுத்து தேர்வில் பொது அறிவியலில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. வினாக்கள் அனைத்தும் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வு நடைபெறும் நேரத்தில் இருந்து 1 மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு கூடங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனால், காலை 7 மணி முதலே தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு வரத் தொடங்கினர். தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர்.

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு எழுத 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1 லட்சத்து 34 ஆயிரத்து 843 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதனால், ஒரு பதவிக்கு 649 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள பிரசிடென்சி ஷெர்வுட் ஹால் சீனியர் செகண்டரி பள்ளி மையத்தில் நடந்த குரூப் தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: டிஎன்பிஎஸ்சி ஒராண்டு கால அட்டவணையை அமைத்து அதன் அடிப்படையில் தொடர்ந்து தேர்வுகளை குறித்த நேரத்தில் நடத்தி வருகிறது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இந்தாண்டுக்கான கால அட்டவணையை வெளியிட்டோம். அதில் 7 தேர்வுகள் இந்தாண்டு நடைபெறும் என்று குறிப்பிட்டு இருந்தோம். அதன் அடிப்படையில் இன்றுடன் (நேற்றுடன்) சேர்த்து 6 தேர்வுகள் குறித்த காலத்தில் நடந்துள்ளது.

இன்னும் நடக்க வேண்டிய ஒரு தேர்வுக்கும் அடுத்த 10 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும். அத்துடன் இந்தாண்டு கால அட்டவணை முழுமையாக நிறைவு செய்யப்படும். இதுவரை தேர்வாணையம் கடந்த 13 தேர்வுகளை குறிப்பிட்ட, அறிவித்த தேதியில் நடத்தி, அறிவித்த தேதியில் முடிவுகளையும் வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் சுமூகமாக நடந்துள்ளது.

இதன் முடிவுகள் நாங்கள் பொதுவாக 2 அல்லது 3 மாதங்களில் அனைத்து முடிவுகளையும் வெளியிட்டு வருகிறோம். அதன்படி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும். இதற்கு அடுத்தப்படியாக மெயின் தேர்வு நடக்க வேண்டும். அந்த தேர்வை மார்ச் மாதத்தில் நடத்தலாம் என்று நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இறுதி முடிவு வெளியிடும் வரை, கவுன்சலிங் நடைபெறும் வரை பணியிடங்களை அதிகரித்து கொண்டே போகலாம். அதன்படியில் குரூப் 2 தேர்வுகளிலும் நிச்சயமாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News