பழைய குற்றால அருவி வெள்ளத்தில் பலியானது வஉசி கொள்ளு பேரன்
Advertisement
தென்காசி: பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தது வஉசி கொள்ளு பேரன் என தெரிய வந்துள்ளது. நெல்லை என்ஜிஓ காலனி ராம் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் அஸ்வின் (17). இங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்1 வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறை என்பதால் தென்காசி மாவட்டம் மேலகரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார்.
கடந்த 17ம் தேதி பழைய குற்றலாத்திற்கு உறவினர்களுடன் குளிக்க சென்றபோது, திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இவர், வஉசியின் கொள்ளுப்பேத்தி ஆறுமுகச்செல்வியின் அக்கா செண்பகவள்ளியின் பேரன் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
Advertisement