சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது!
Advertisement
கடலூர்: கடலூர் புதுவண்டிபாளையம் கரையேறவிட்ட நகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் விழாவாக நாளை இடும்பன் வாகனம், காமதேனு வாகன வீதியுலா நடைபெறுகிறது. மூன்றாம் நாளில் பல்லக்கு, ரிஷப வாகன வீதி உலா நடைபெறுகிறது. நான்காம் நாளில் விமானம், நாக வாகன வீதியுலா நடைபெறுகிறது.
5ம் நாள் விழாவாக 26ம் தேதி முருகர் சக்திவேல் பெரும் விழாவும், 27ம் தேதி இரவு 9 மணி அளவில் சிகர நிகழ்ச்சியாக சூரசம்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து 28ம் தேதி திருக்கல்யாணம், வெள்ளை யானை வாகனத்தில் வீதி உலா மற்றும் கொடி இறக்கம் நடைபெறுகிறது. 29ம் தேதி விடையாற்றி உற்சவம் மற்றும் சுவாமி வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகிறது.
Advertisement