கிராம சபை கூட்டத்தில் துணை பிடிஓ மயங்கி விழுந்து சாவு
தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த இளையாங்கன்னி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதனை கண்காணிப்பதற்காக துணை பிடிஓ சிவகுமார்(55) ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது, அங்கு பணிபுரிந்த ஊழியர்களிடம் தண்ணீர் கேட்ட சிவக்குமார், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து அங்கேயே உயிரிழந்தார்.
Advertisement
Advertisement